1- 9 ம் ஆண்டு மதிப்பீட்டிற்கான காலம்,  நேரம்
இடம்: இணையமுற்றம் 
காலம் அனைத்து வளாகங்களிலும்  சனி 06.06.2020 நடைபெறும்.
நேரம்:
ஆண்டு 1 - 3   10.00 – 11.15  
ஆண்டு 4  10.00 – 11.30  
ஆண்டு 5 – 9   11.30 – 13.30  
பிள்ளைகள் தமக்குத்தேவையான உணவு, நீர், அகராதி மற்றும்  தேர்வு எழுதுவதற்குத் தேவையான உபகரணங்களை மட்டும் கொண்டு வருதல் வேண்டும். எல்லோரும் அவரவர் சொந்த உபகரணங்களை மட்டுமே பாவிக்கவேண்டும். தேர்வு மண்டபத்தில் பாடசாலைப் பை அல்லது கையடக்கப்பேசி  அனுமதிக்கப்படமாட்டாது. 
 
அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழுவினரின் அடுத்த நிகழ்வாக திருக்குறள் ஒப்பிவித்தல் நிகழ்வை நடாத்த திட்டமிட்டுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இணைய வழி மூலம் 2007, 2008, 2009, 2010 ம் ஆண்டு பிறந்த மாணவர்களை மேற்படி நிகழ்வில் இணைத்துக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம்.