அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழுவினரின் அடுத்த நிகழ்வாக திருக்குறள் ஒப்பிவித்தல் நிகழ்வை நடாத்த திட்டமிட்டுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இணைய வழி மூலம் 2007, 2008, 2009, 2010 ம் ஆண்டு பிறந்த மாணவர்களை மேற்படி நிகழ்வில் இணைத்துக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம்.
 

அன்னை பூபதி அம்மாவின் நினைவு தினத்தில் இடம்பெற்ற  «மழலையர் முற்றம்» இணைய வழி (Teams) மூலம் முதற் தடவையாக நடைபெற்ற காணணொளி தற்போது இணைத்தில் வெளிவருவதில் அன்னை பூபதி கலைக்கூடத்தினராகிய நாம் பெருமை கொள்கிறோம்.

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்  அன்னை பூபதியின் நினைவு நாள்
 
நாட்டுப்பற்றாளர் தினத்தில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதுடன், இடர்களும் இன்னல்களும் எம்மீது திணிக்கப்படும் காலத்தில் நாம் ஒரு தேசிய இனமாக, இந்நிலைகளில் இருந்து மீண்டெழப் பணியாற்ற வேண்டும் என்பதில் எம்முடன் இணைந்து அர்ப்பணிப்புடன் தமிழ்ப் பணி செய்திடும் நிர்வாகிகளே, ஆசிரியர்களே!
 

ஒவ்வொரு ஆண்டும் உயிர்த்த ஞாயிறு வாரம் ஏன் நகர்கிறது என்று யோசிக்கிறீர்களா? - Lurer du på hvorfor påsken flytter hvert år?

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் வெவ்வேறு வாரங்களில் தவக்கால/Påske விடுமுறை வருகின்றது, அதற்கான காரணிகள் இரண்டு உள்ளன. அதாவது முழுச்சந்திரனையும், பூமி கதிரவனை சுற்றி வரும் ஓர் குறிப்பிட்ட நாளையும் கருத்தில்க் கொண்டுதான், தவக்கால உயிர்த்த ஞாயிறு வாரத்தை கணிக்கின்றார்கள்.