You are here

மூலங்களைத் தேடித் தக்க சான்றுகளுடனும் வரைபுகளுடனும்-மரபு களுடன் கற்பித்தல்,

மூலங்களைத் தேடித் தக்க சான்றுகளுடனும் வரைபுகளுடனும்-மரபு களுடன் கற்பித்தல், மாணவர்களினது சிந்தனையைத் தூண்டும். இதுவே அவர்களைத் தேடுதல் உள்ளவர்களாக வளர்த்தெடுக்கும். இக் கருத்தினை முன்வைத்து நடந்தேறிய, அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை 
 
பயிற்சிப்பட்டறை 2018.09.30 அன்று நடைபெற்றது. 85 ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆளுமையை வளர்த்துக் கொண்டார்கள். 
 
எமது வரலாற்றையும் மொழியையும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் எவ்வாறு இலகுவாகச் சான்றுகள், ஆய்வுகள் ஊடாகவும், விஞ்ஞானரீதியாகவும் கிடைக்கப்பட்ட பெறுபேறுகளை அடிப்படை அமிசங்களோடு ஒப்பீடு செய்து கற்பித்தல் வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் இலகுவாகவும் நம்பிக்கைத் தன்மையுடனும், தெளிவுடனும் கற்றுக்கொள்வார்கள் என்பது எடுத்து விளக்கப்பட்டன. இவை தேடலுக்கான ஒரு உந்துசக்தியாக அமையும். 
 
இலக்கண, இலக்கியம் சார்ந்த பெரும்பாலான பகுதிகளுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. ஐயங்களுக்கான தெளிவுகள் தரப்பட்டன. மேலும் பல வினாக்கள் இருந்த போதும் கால அவகாசம் இன்மையால் தொடர்ந்தும் பல கருத்தரங்குகள் வேண்டும் எனும் தேவை வலியுறுத்தப்பட்டன.
 
அனைத்து ஆசிரியர்களுக்கும்; மிகவும் தேவையானதாகவும் பயன்மிக்கதாகவும் உணரப்பட்ட இப்பயிற்சி பட்டறையினைப் பண்டிதர்; கடம்பேசுவரன் அவர்களும், ஊடகவியலாளர் ஒருவரும் நடத்தியிருந்தனர்.