You are here

மாவீரர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி. 09-11.11.2018

போட்டியாளர்களுக்கு 1மணித்தியாலம் வழங்கப்படும் பாடசாலை நடைபெறும்போது வகுப்பு நேரத்தில் 
போட்டியை நடாத்துதல் வேண்டும்.
 
போட்டித்தாள்தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.
வரையப்போகும் ஓவியத்தை பயிற்சி செய்துகொள்ளலாம் ஆனால் பயிற்சி செய்த தாள் 
வகுப்பறைக்குள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டார்கள்.
 
 
போட்டிக்கான தாளை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.(வர்ணம்தீட்டியிருக்க வேண்டும்)
நான்கு பிரிவுகளாக போட்டி நடைபெறும்
 
வழங்கப்பட்டுள்ள தலைப்பில் ஒன்றை மட்டும் போட்டியாளர்கள் தெரிவு செய்து வரைதல் வேண்டும்.
போட்டிக்காக தலைப்புக்கள்.
 
பிரிவு 1 (வகுப்பு 5,6 ) 
1) தமிழீழ தேசியசின்னங்களில் ஒன்று  
  அல்லது  
2) நடுகல் வழிபாடு
 
பிரிவு 2 (வகுப்பு 7,8 ) 
1) முள்ளிவாய்க்கால் பேரவலம் 
  அல்லது  
2) மாவீரர் துயிலுமில்லம்.
 
பிரிவு 3 (வகுப்பு 9,10 ) 
1) நல்லூரில் அமைந்திருந்த தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி 
  அல்லது  
2) ஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்
 
பிரிவு 4 (வகுப்பு 11,12 ) 
1) ஈழத்தில் திட்டமிட்டு ஏமாற்றப்படும் ஒப்பந்தங்களும் அரசியல் தீர்வும்
  அல்லது  
2) தமிழீழ வரைபடம் (தமிழரின் பூர்வீகபிரதேசங்களின் பெயர்கள் வரைபடத்தில் இடம்பெறவேண்டும்)