You are here

கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் தரம்-5ல் கல்விகற்ம் 52 வறிய மாணவர்களுக்கு

16.01.2019 புதன் கிழமை நோர்வே நாட்டைச்சேர்ந்த அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூட தொய்யன் வளாகத்தினரால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ள கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் தரம்-5ல் கல்விகற்ம் 52 வறிய மாணவர்களுக்கு மிகவும் பெறுமதியான கற்றல் உபகரணங்களான தேவையான பயிற்சிப் புத்தகங்கள் பயிற்சிக் கொப்பிகள் மற்றும் அழிப்பான்கள் அளவுகோல்கள் எழுது கருவிகள் கட்டர்கள் கோவைகள் நாடாக்கள் உகப் படங்கள் இலங்கைப் படங்கள் விரைவு கணித நூல்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இப்பிரதேசம் 30 வருடகால யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்திலும்சரி

கல்வியிலும்சரி வளர்ச்சியைடயாத நிலையிலே மக்கள் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தில் அதிகமாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினரே அதிகம். இவ்வாறான நிலையில் இருந்து பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்களுக்கு இன்றையதினம் கற்றல்

உபகரணங்கள் கிடைக்கப்பெற்றமையால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கலந்துகொண்டதுடன் இக்கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ள நோர்வே நாட்டு அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூட தொய்யன்வளாக உறுப்பினர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இவ் வலயம் இலங்கையில் உள்ள 98 கல்வி வலயத்தில் இறுதி வலயமான 98 இடத்தில் கானப்படுவது கவனத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.

image: