You are here

மே 18 உலகத்தமிழினத்தின் வரலாற்றிலேயே

மே 18 உலகத்தமிழினத்தின் வரலாற்றிலேயே எவராலும் மறக்கமுடியாத கொடூரமான, மனிதாபிமானமே மரணித்துப்போன ஒரு நாளாகும். இந்நாளில் தான் சர்வதேசமும் புலன்களை இழந்து முடமாகிப்போனது. எமது முப்பது ஆண்டு விடுதலைப் போர் சிதைக்கப்பட்ட நாள். சமாதானம் என்றும் சமரசம் என்றும் சாகசம் செய்து ஏமாற்றப்பட்ட நாள். இறுதிக்கட்டப் போரில் எம்மக்களைச்;,  குழந்தைகள், பெண்கள்;;, முதியவர் என்றுகூடப் பாராமல் கொத்துக் கொத்தாகக் தமிழர்களைக் கொன்றொழித்தார்கள்; சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள். 
image: