You are here

நோர்வே கல்வியில் புதிய பாடத்திட்டம்

திங்களன்று(18.11.2019), அறிவுசார் அமைச்சர் Jan Tore Sanner அவர்கள், நோர்வேயின் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியின் பொதுவான பாடங்களுக்கான புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார், இத்திட்டம் அடுத்த கல்வியாண்டு(2020/21) முதல் பயன்படுத்தப்படும் என்றார்.
 
இப் புதிய பாடத்திட்டம் நோர்வே கல்வியில், 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட பெரிய மாற்றம் ஆகும் எனவும் இத்திட்டத்தின் மூலம் வருங்காலத்தில் பிள்ளைகள் நல்ல வேலைவாய்ப்புகளையும் வாழ்க்கையையும் பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.
 
நோர்வே மொழியில் Bokmål,Nynorsk எனப்படும் இரண்டு விதமான எழுத்து பேச்சு வகைகள் உள்ளன.
 
ஒரு நோர்வே பிள்ளை பாடசாலையில் அதிகம் பயன்படுத்தும் மொழி வகை, அப்பிள்ளையின் பிரதான மொழி(Hovedmål) என்று அழைக்கப்படுகிறது. அதிகமான பிள்ளைகள் Bokmål எனும் வகையை பின்பற்றுவதால் Nynorsk என்பது அப்பிள்ளைகளின் பக்க மொழியாக(sidemål) அமைகிறது.
 
இதுவரை காலமும் பிள்ளைகள் பாடசாலையில் பிரதான மொழியையும் பக்க மொழியையும் கட்டாய பாடமாகக்கற்று தேர்வு எழுதி மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் எனும் முறை இருந்தது.
 
எனிவரும் காலங்களில் நோர்வே பாடசாலைகளில் பக்கமொழியின் அரை ஆண்டு மதிப்பீடு 8 மற்றும் 9 வகுப்புகளில் அகற்றப்படும் என்றும், ஆனால் 10 ஆம் வகுப்பில் தொடர்ந்து தக்கவைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
 
மேலும் பாடத்திட்டத்தின் மூன்று கருப்பொருள்களில் கவனம் செலுத்தப்படவுள்ளன:
 
>ஜனநாயகம் மற்றும் குடியுரிமை - Demokrati og medborgerskap
 
> நிலையான வளர்ச்சி - Bærekraftig utvikling
 
> பொது சுகாதாரம் மற்றும் வாழ்க்கை மேலாண்மை - Folkehelse og livsmestring
 
அத்துடன் பிள்ளைகள் விளையாட்டின் மூலம் கற்றல், எண்ணியல்(DIGITAL) திறன்,
 
நிரலாக்கம்(programmering), கணக்கீட்டு சிந்தனை(algoritmisk) போன்றவற்றின் தரத்தை உயர்த்துதல் என்பனவாகும்.
 
கதிர்