You are here

புத்தாண்டு பிறக்கும்போது பட்டாசுகளை பாதுகாப்பாக பயன்படுத்தவும்

 
ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளின் பயன்பாட்டால் தீ மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக பட்டாசுகளை சட்டவிரோதமாக கொளுத்துவதால் கட்டிட தீ, மற்றும் காட்டுத் தீ போன்றவை உருவாக வழியேற்படுகிறது. கடுமையான தீ மற்றும் வெடிப்பு காயங்களின் விளைவாக அதிகமானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கிறது. பட்டாசுகளை கொளுத்தும் போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பான விதிமுறைகளை பின்பற்றி அதற்கேற்ப வெடிபொருட்களை நிதானமாக கையாளவேண்டும் என்று நோர்வேயின் தீயணைப்புப்படை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
 
தீயணைப்புப் படையினரின் விதிகள்:
 
- பட்டாசு வெடிப்பதற்கு பொருத்தமான இடத்தை தெரிவுசெய்து அவசரப்படாமல் நல்ல நேரத்தை ஒதுக்கவேண்டும்.
- பட்டாசு வாங்குமுன் அப்பட்டாசு நோர்வேயில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும், கொளுத்துமுன் அதன் பையில் எழுதப்பட்ட இயக்க வழிமுறைகளை கவனமாகப் படிக்கவேண்டும்.
- பட்டாசு கொளுத்தும்போது அது சரிந்து விழாமல் முன்கூட்டியே அதை ஓர் நிலையான இடந்தில் வைக்கவேண்டும்.
- பட்டாசை பற்றவைக்க முன் அது முற்றிலும் சேதம் இல்லாமல் இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.
- எரியும் நெருப்பில் பட்டாசை போடவேண்டாம், பட்டாசின் திரியை நெருப்புக்குச்சியால் கொளுத்துவதை தவித்து அதை பற்ற வைப்பதற்கான தகுந்த கருவியை அப்பட்டாசுக் கடையில் வாங்கி உபயோகிக்க வேண்டும்.
- பற்றவைக்கும்போது கண் சேதமடையும் வாய்ப்பைக் குறைக்க அதற்கேற்ற பாதுகாப்பான கண்ணாடிகளை அணியவேண்டும்.
- குந்தியிருந்து கொளுத்தவேண்டும், கொளுத்தும்போது அப்பட்டாசின் மேல் குனியக்கூடாது.
- பட்டாசுகளை ஒருபோதும் வளைக்கக்கூடாது, முதல் முயற்சியில் பற்றவில்லை என்றால் மீண்டும் அப்பட்டாசுகளை பற்ற வைக்கவேண்டாம்.
- பட்டாசு கொளுத்தும் இடத்தை நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து நல்ல தூரத்தை வைத்திருக்க வேண்டும்.
- மது அருந்திவிட்டு பட்டாசு கொளுத்துவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
- ஈக்கிள் தடி பொருத்திய ஏவுகணைகள் போன்று வானத்துக்கு சென்று கீழே விழும் பட்டாசுகளைப் பயன்படுத்த அனுமதியில்லை.
- சென்ற ஆண்டு வாங்கி கொளுத்தாமல் வைத்திருக்கும் பழைய பட்டாசு வெடிகளை இவ்வாண்டு கொளுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். அவைகளை இவ்வாண்டு பட்டாசு விற்பனை செய்யும் இடங்களிலேயே திருப்பி ஒப்படைக்கலாம்.
- நோர்வேயில் பட்டாசு வாங்குவதற்கும் 18 வயது வரம்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள் பூந்திரி கொளுத்த அனுமதியுண்டு.
- புத்தாண்டு கொண்டாட்டத்தைத் தவிர மற்ற நாட்களில் பட்டாசு கொளுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, பாதுகாக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் கூடுதல் பெரிய தீ ஆபத்துகள் உள்ள இடங்களில் கொளுத்துவதற்கு மொத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு கொளுத்தும் நேரம் மற்றும் இடம் குறித்த உள்ளூர் விதிமுறைகளைப் பின்பற்றவும். சந்தேகம் இருந்தால், தங்களிடம் கேட்டு அறியுங்கள் என்கிறார்கள் நோர்வேயின் காவல்துறை மற்றும் தீயணைப்புத் படையினர்.
பட்டாசுப்பையில் குறிப்பிடப்பட்ட வயது வரம்புக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் கவனக்குறைவான மற்றும் தற்செயலான பட்டாசு பயன்பாடின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தீக்காயங்கள் வருகின்றது.
 
மீண்டும்:- "பட்டாசுகளைப் கொளுத்துவதற்கு முன்பு அதை இயக்கும் வழிமுறைகளை கவனமாகப் படித்து அதற்கேற்ற பாதுகாப்பான கண்ணாடி அணிவதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். கொளுத்துபவர்கள் பார்வையாளர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் சேதமடையாதபடி வெடி கொளுத்தும் இடத்தைத் தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்".