You are here

kongens nyttårstale 2019 : நோர்வே மன்னர் ஐந்தாவது ஃகாரால்ட் அவர்கள் (Kong Harald V), புத்தாண்டுக்கு முதல் நாள் மாலை(31.12.2019), ஆற்றிய உரையின் தமிழாக்கம்

நோர்வே மன்னர் புத்தாண்டுக்கு முதல் நாள் மாலை(31.12.2019), ஆற்றிய உரையின் தமிழாக்கம்

புத்தாண்டு மாலை என்பது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிறைந்த ஒரு மாலை. கடந்தகாலம் நடந்தவற்றையும் இவ்வாண்டு நடக்கப்போவதையும் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம்.

இன்றிரவு நம் நாடு முழுவதும், ஐந்து மில்லியன் மக்கள் தங்கள் தனித்துவமான வாழ்க்கையுடன் இருக்கிறார்கள். சிலர் புதிய ஆண்டை மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் சந்திக்கிறார்கள், மற்றவர்கள் இழப்புகளாள் கொந்தளிக்கிறார்கள். நம்மில் பலர் நம் இதய சோகத்துடன் புதிய வருடத்தில் நுழைகிறோம். ஆனால் நம்பிக்கை அனைவருக்கும் சொந்தமானது.

இன்றிரவு எனது ஆசை என்னவென்றால், நம்பிக்கை நம் அனைவரையும் புதிய வருடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே.

இந்த நத்தார் நாளில் ஆரி பேன்(Ari Behn), இறந்ததால் நாங்கள் பலமாக பாதிக்கப்பட்டுள்ளோம். அரண்மனை சதுக்கத்தில் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி, இரக்கத்தை காட்டியதை உணர்வுபூர்வமாக அனுபவித்தோம். எங்கள் அன்பான மூன்று பேரக்குழந்தைகளின் தந்தையைப் பற்றி வெளிப்படுத்தப்பட்ட அனைத்து நல்ல நினைவுகளிலும் அழகான வார்த்தைகளிலும் ஆறுதல் கிடைக்கின்றது.

சில நேரங்களில் வாழ்க்கையை சகித்துக்கொள்ள முடியாது. சிலருக்கு, அது மிகவும் இருட்டாகி, எதுக்கும் உதவாமல் போகின்றது. தங்கள் அன்புக்குரியவர்களின் அன்பு கூட கிடைப்பதில்லை. சிலர் வாழ்க்கையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பார்க்கிறார்கள். எஞ்சியவர்கள் அவர்கள் நேசித்தவர்களை அடைய முடியாவிட்டாலும், இழந்தாலும் வாழ்ந்தே தீரவேண்டும்.

எதிர்காலத்தில் வரவிருக்கும் சம்பவங்கள் பற்றி எங்களுக்கு மிகக் குறைவாகவே தெரியும். நம் வாழ்க்கையில் நடைபெறும் நிச்சயமற்ற தன்மைகள் நம் அனைவரையும் பாதிப்புள்ளாக்குகிறது. நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த விடயம் என்னவென்றால் ஒருவருக்கொருவரை கவனிப்பது அணைத்து வாழ்வது, நல்ல வார்த்தைகளை பேசிக்கொள்வது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

தேவைப்பட்டால் ஒருவரையொருவர் தாங்கிச் செல்லுங்கள்.

இன்றிரவு எனது எண்ணங்கள், பழைய வருடத்திலிருந்து தாண்டி வந்த அனைவரிடமும் உள்ளது. குறிப்பாக அவர்கள் மகிழ்ச்சியாக இருந்த ஒருவரின் சோகமான இழப்புடன் உள்ளது.

***

நாங்கள் இன்று ஒரு புதிய ஆண்டுக்குள் நுழைகிறோம். ஒரு தேசமாக நாம் நமது நெருங்கிய வரலாற்றை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் - மேலும் நாம் யார் என்பதையும் எங்கள் பொதுவான அடித்தளத்தையும்,நோர்வே சமூகம் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, என்பது பற்றி நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

நம் நாட்டில் நாங்கள் ஒரு பொது சன சமூக ஒழுங்கை உருவாக்கியுள்ளோம். அதில் எல்லோரும் தங்கள் திறனுக்கேற்ப நட்டுக்கு பங்களிப்பு செய்கிறார்கள், அது எங்கள் நாட்டினதும், மக்களினதும் நன்மைக்கு உதவுகின்றது.

நாம் மற்றவர்களுடன் அவர்களின் சுமைகளையும் நன்மைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். அத்துடன் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களின் வழியாக நாம் ஒருவரை ஒருவர் அணைத்துச்செல்கிறோம்.

எங்கள் குழந்தைகள் பாடசாலைக்கு செல்வதையும், நாங்கள் நோய்வாய்ப்படும் போது எங்களுக்கு உதவி கிடைக்கும் என்பதையும், நம் முதியோர்கள் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும் நாம் ஒன்றிணைந்து உறுதிசெய்கின்றோம்.

ஆனால் ஒரு நம்பிக்கையாக இருந்த நம் சமூகம் இன்று முன்பு இருந்ததை விட ஆழமாக செல்கிறது:

அது நாங்கள் ஒருவருக்கொருவர் நல்ல நம்பிக்கையாகவிருக்கிறோம், ஒருவரையொருவர் சந்தேகிக்கவில்லை என்பது பற்றியது. இந்நம்பிக்கையை நாங்கள் நன்கு பாதுகாத்துக்கொள்வோம்.

ஏனெனில் இது எங்கள் நாட்டிற்காகவும் எங்கள் மக்களுக்காகவும், விலை உயர்ந்த அனுபவங்களாள் ஒரு நிலையான அத்திவாரத்தின் மேல் கட்டப்பட்டுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நோர்வேயை ஒரு சுதந்திர நாடாக மீண்டும் கட்டியெழுப்ப நாம் ஒத்துழைப்போம் எனும் நம்பிக்கை எங்களுக்கு தேவைப்பட்டது.

அந்த ஐந்து இருண்ட ஆண்டுகள் நடந்த போர் எங்களுக்கு அவநம்பிக்கையையும் சந்தேகத்தையும் உருவாகியது.

கிழக்கு ஃபின்மார்க்கின்(Øst-Finnmark), விடுதலை அடைந்த நாள் என்பது இரண்டாம் உலகப் போரின் முடிவின் தொடக்கமாகும். அந்த விடுதலை நாளை அடையாளப்படுத்த, கடந்த ஐப்பசியில் நான் சீர்க்கெனேசில்(Kirkenes) இருந்தேன்.

நாம் இப்போது நுழையும் ஆண்டில், அமைதி வந்து 75 ஆண்டுகள் ஆகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே இந்த 75 ஆண்டுகளில் நோர்வே எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை நாங்கள் காண்கிறோம்?

நாங்கள் ஒரு அற்புதமான செல்வ வளர்ச்சி மூலம் எங்கள் நாட்டை பின்தொடர்ந்துள்ளோம்.

நோர்வே நல்ல இயற்கை வளம் நிறைந்த நாடு. இங்கு ஆராச்சிகளின் மூலம் சக்திகளை உருவாக்குகிறோம்.

இந்நாடு புத்திசாலித்தனமான தலைமையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.

நோர்வே மக்கள் சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்வதற்கும் நல்ல மனிதர்களாக வளர்வதற்கும் கல்வி, வேலை, உணவு மற்றும் வீடுகள் என்பன அத்தியாவசியம் என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.

இந்நாடு வலுவான கரங்களாலும், சிறந்த சகிப்புத்தன்மை கொண்ட மக்களாலும் கட்டப்பட்டுள்ளது.

நோர்வே மக்கள் தைரியமுள்ள, கடின உழைப்பாளிகள் அத்துடன் படைப்பாற்றல் உள்ளவர்கள். கரடுமுரடான இயற்கை மற்றும் கடுமையான காலநிலை, வானிலை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட மக்கள்.

இந்த நாடு எமக்கு சொந்தமானது, எம்மை விட பெறுமதியான பங்கையுடையது என்று உணரும் வகையில், எமது தேவைக்கேற்றபடி கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

நீங்கள் உங்களை விட பெரிய நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள், இந்த நாடு உங்களுடையது உங்களுக்குச் சொந்தமானது என்பதை உணர வேண்டியதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக கலாச்சார ரீதியாக நிறைய மாறிய ஒரு நாட்டை இன்று நாம் காண்கின்றோம். எங்களுடைய சொந்த பழைய கதைகள் மற்றும் மரபுகள் இருக்கும் இடத்தில், எங்கள் கலை மற்றும் மதம் என்பன நோர்வேயில் குடியேறிய வெளி நாட்டவர்கள் கொண்டு வந்த பிற கலாச்சாரங்களுடனும் மேலும் உலக நாடுகளுக்கு அதிகமான பயணம் செய்யும் நோர்வீயிய மக்கள் வெளியிலிருந்து கொண்டுவந்த கலாச்சாரங்களுடனும் பிணைக்கப்பட்டுள்ளன.

நோர்வே ஒரு சிறிய நாடு, அளவில் சிறிதாக இருந்தபோதிலும், பூகோளத்திலுள்ள பல காரியங்களுக்கு உதவி செய்து வருகின்றது. உலக அரங்கில் நோர்வேயால் எழுப்பப்படும் குரலை மற்றவர்கள் செவிமடுக்கிறார்கள்.

நோர்வேயில் ஓர் அற்புதமான வலுவான இளைஞர் தலைமுறை வளர்ந்து வருவதை நாங்கள் காண்கின்றோம். இளைஞர்கள் நாட்டின் பொதுவான எதிர்காலத்திலும் சமுதாய வளர்ச்சியிலும் செல்வாக்கு செலுத்தி தங்கள் அறிவையும் அர்ப்பணிப்பையும் நாட்டுக்காக பயன்படுத்த விரும்புகிறார்கள்.

நோர்வேயில் நாங்கள் ஒருவருக்கொருவர் போல ஆகிவிட்டோம், எங்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள், வித்தியாசங்கள் குறைந்துள்ளது. ஆகூலாக, கடந்த ஆண்டுகளில் நாம் ஒவ்வொருவரும் உண்மையில் கொஞ்சம் வித்தியாசம் என்பதையும் அங்கீகரித்தோம்.

இப்போது நோர்வேயிலுள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் மற்றும் அரசியலிலும், பல்வேறு சமூக நிறுவனங்களிலும், உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் வந்து குடியேறிய மக்கள் தொகையாக இருக்கிறார்கள், அம்மக்களுடன் வயது,பாலினம், கலாச்சாரம், மதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றில் வேற்றுமை காட்டாமல் ஒன்றாக வாழ்வோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, என் மதை அதிகம் தொடுவது நோர்வேயில் நான் மேற்கொள்ளும் சுற்றுப் பயணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:

நோர்வேயில் சக மனிதர்களைப் பற்றி அக்கறை கொண்ட மக்களை நாங்கள் காண்கின்றோம், அவர்கள் இந்நாட்டுக்காக தன்னார்வத் தொண்டு செய்துவருகிறார்கள், சிறிய சமூகங்கள் சிறப்பாக வாழ்வதற்காக போராடுகிறார்கள்.

ஏனென்றால், ஒருவர் தனக்குத்தானே என்று வாழும்போது அத்தனிநபரின் வாழ்க்கை அவருக்கே சொந்தமாகிறது என்பதை நாங்கள் இங்கே பார்க்கிறோம்.

எங்கள் " உயிரின் சக்தி " பல வழிகளில் அச்சுறுத்தப்படும் சமூகங்களை பராமரிக்க பயன்படுத்தப்பட வேண்டும்.

அது யாரால்? எந்த வழியில்?

பெரிய சமூகம் சிறிய சமூகங்களை அச்சுறுத்தும் போது இரண்டு சமூக கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. எனவே எங்கள் " உயிரின் சக்தி " தான் நம் வாழ்க்கையில் இன்னும் சிறப்பைக் கொடுக்கும்.

ஒரு தனிமனிதருக்குள் இருக்கும் "உயிர் சக்தி" தான் இந் நாட்டுக்கும் மக்களுக்கும் சிறப்பான வாழ்க்கையை தொடர்ந்து கொடுக்கும்.

இன்று நம் நாடில் பலவீனமான மாவட்ட கொள்கை உள்ளது. எனவே எம் சக்தியைகொடுத்து மாவட்டங்களின் வளர்ச்சியை ஈடு செய்ய வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள தனி நபர்களின் சக்தியை ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவும், அதை முன்னோக்கி கொண்டு வரவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

தனிநபர்களின் நம்பகத்தன்மையின் கூட்டுத்தொகை சமூகத்தின் நம்பகத்தன்மை ஆகும்.

***

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பின், கடந்த 75 ஆண்டுகளாக என் தலைமுறையினர் ஒரு குறிப்பிடத்தக்க அபூர்வமான முறையில் பயணித்துள்ளனர்.

நான் இங்கு தொடர்ந்து பேசப்போவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்:
நாங்கள் ஆகூல் உள்ளவர்கள், அதற்காக கடுமையாக உழைத்துள்ளோம்.

நாம் மேலும் முன்னோக்கி செல்லும் வகையில் நம் நாட்டையும், மக்களையும் ஒருவருக்கொருவர் பலப்படுத்த மேலும் கடினமாக உழைக்க வேண்டும்.

நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பிய ஒரு அடித்தளமுள்ள கட்டடத்தில் இன்று நிற்கிறோம் - மேலும் அதை நாம் பாதுகாக்க வேண்டும்.

அமைதி உடையக்கூடியது, நம்பிக்கை பலவீனமானது, மேலும் வாழ்க்கை உடையக்கூடியது, இதை நாம் தொடர்ந்து நினைவுபடுத்துகிறோம்.

வளர்ச்சியுடன் வாய்ப்புகளும் நம்மை தொடர்கின்றன - அவற்றை நாம் புத்திசாலித்தனமானதாகவோ அல்லது விவேகமற்றதாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொழில்நுட்பங்கள் நமக்கு முன்னால் உள்ளது, அங்கு நாம் எதிர்கொள்ளத் தயாராக இல்லாத சங்கடங்களையும் எதிர்கொள்கிறோம்.

குறுகிய கால ஆதாயத்தைத் தேடுவதன் மூலம் சிறந்த பாதையில் நாம் செல்ல முடியும். இதன் மூலம் தனிநபர்கள், சமூகம் மற்றும் உலகத்துக்கு சிறந்த சேவை செய்யலாம்.

உலகிலுள்ள வளமான வளங்களை நாம் தாங்கிக் கொள்ளக் கூடியதை விட அதை கடினமாகப் பயன்படுத்துகிறோம் என்பதை ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்துகின்றன.

எங்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து புதிய வாய்ப்புகளையும் எதிர்கொள்வதற்கு நமக்கு நேர்மை,கட்டுப்பாடு தேவை.

காலநிலை மற்றும் உலகளாவிய அமைதியின்மையால் ஏற்படும் விரைவான மாற்றத்தின் போது, அந்த முக்கியமான தலைப்புகளில் நல்ல உரையாடல் நடத்த நமக்கு மன அமைதி தேவை.

அதே நேரத்தில், பொறுமையில்லாத இளைஞர்களை நாம் ஒரு சவாலாக எடுக்க வேண்டும்.

நாம் எம் உயிரை அழிக்கக்கூடாது அதே நேரம் மற்றவர்களையும் இழக்கக்கூடாது. அனைவரும் எமக்குத் தேவை.

நாம் ஒன்றாக உருவாக்கிய எல்லா நன்மைகளையும் இழக்கக்கூடாது.

நாங்கள் மனிதர்கள் என்னத்தை சம்பாதிக்கிறோம் என்பது சிறந்ததா அல்லது எங்கள் பொதுவான எதிர்காலம் சிறந்ததா? இக்கேள்வி என்பது நம் அனைவரினதும் மனதை தொட்டு ஆக்கிரமிக்கிறது. இதற்கு எங்களிடம் மேலும் ஆழமான உடன்பாடில்லாத வெவ்வேறு பதில்கள் உள்ளன. ஆனால் நாம் ஒன்றிணைந்து இதுபோன்ற பொதுவான பெரிய கேள்விகளை, தொடர்ந்து தேட வேண்டும்.
இச்சவால்களை பாடசாலையில் மதிய உணவு நேரத்தில் சாப்பாட்டு அறை மேசையில் சுற்றியிருந்து சாப்பிடும்போதும், அரசியலிலும்,சர்வதேச அரங்கங்களிலும் ஒன்றாக இருந்து கூடிப் பேசுவதன் மூலம் நாம் தீர்க்க முடியும்.

நாம் ஒவ்வொரு மனிதரும் வித்தியாசவர்கள், என்ற உண்மையுடன் வாழ வேண்டும், விரும்பத்தகாத மனிதர்களின் அறிவை சகித்துக்கொள்ள வேண்டும்.
எங்கள் சொந்த சிறிய நாட்டையும் தாண்டி நாம் நிர்வகிக்க வேண்டும். நாம் உலகத்தை பார்க்கும் பார்வைதான் ஒரே சரியான தீர்வு என்பதல்ல, இதை தயங்காமல் உணரும் மனத்தைரியம் எமக்கு வேண்டும்.

ஆம் நாம் காயமடைந்தாலும் கூட அதை சவாலாக எடுக்கவேண்டும், அப்படியென்றால்தான் சிறிய மற்றும் பெரிய சமூகங்களோடு ஒன்றாக வாழலாம்.

***

சுதந்திரமான ஒரு சமூகம் வித்தியாசமாக வாழ வேண்டும் என்றால், அவர்கள் எல்லா மக்களுடனும் சமத்துவத்தை வளர்க்க வேண்டும்.
ஒரு சமுதாயம் பெறுமதியுள்ள மக்களின் வெவ்வேறு கருத்தியலால் கட்டியெழுப்பப்படும் போது, இருண்ட போரிலிருந்து கிளம்பும் எதிரொலி போல என்ன நிகழும் என்பது எங்களுக்குத் தெரியும்.

இறுதியாக வந்த சமாதானத்தை நாம் கொண்டாடும்போது ஒரு விடயத்தை நம்முடன் அனுபவமாக கொண்டு வரவேண்டும், அவை இவையா:

நாம் எல்லோரும் சமமான தகுதியானவர்கள் என்பது எமக்கு வெளிப்படையாகத் தோன்றலாம். ஆனால் அதற்குப் பிறகு நாம் உண்மையில் வாழ ஆரம்பித்தால், நல்ல மாற்றங்கள் ஏற்படும். பின்னர் அனைவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் ஒன்றிணைய முடியும்.

நோர்வே வாழ் மக்களுக்கும் பிற நாடுகளில் வசிக்கும் நோர்வேஜியர்களுக்கும் மலரப்போகும் புத்தாண்டு இனிமையாக அமைய விரும்புகிறேன்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

image: