You are here

போட்டிகளுக்கான இணையம்

 
முதற்தடவையாக நோர்வேரீதியாக அனைத்து அன்னை வளாகங்களையும் இணைத்து அன்னை தலைமை நிர்வாகம் அன்னைத் தமிழ்முற்றப் போட்டியினை நடத்தவுள்ளது என்ற செய்தி, நோர்வே வாழ் அனைத்துத் தமிழர்களுக்கும் ஓர் உவகையான செய்தியாக உயர்ந்து நிற்கின்றது.
 
மேலும், சில போட்டிகள் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தற்போது கல்வி கற்காத பழைய மாணவரையும் மற்றும் ஏனையோரையும் இணைக்கும் நோக்கத்தையும் கொண்டதாக அமைகின்றது என்பதையும் மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.
 
அனைத்துப் போட்டிகளும் 2020ஆம் ஆண்டில் நடைபெறும். இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைவரினதும் ஒத்துழைப்பினையும், ஆலோசனைகளையும் அன்னை தமிழ்முற்றப் போட்டிக்குழு வேண்டி நிற்கின்றது.

http://annai-tamilmutram.annai.no/