You are here

கடந்த இரு வாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா என்கின்ற கிருமியின் தாக்கம் எங்களின் நாளாந்த வாழ்கையைப் பாதித்துள்ளது.

கடந்த இருவாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையைப் பாதித்துள்ளது. நோர்வேயில் கொரோனா கிருமியால் ஏற்படும் பாதிப்புக்களை உடனுக்குடன் அறிய https://www.fhi.no/sv/smittsomme-sykdommer/corona/
என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்.

இவ்விடயம் சார்ந்து நோர்வே அரசு எடுக்கும் முடிவுகளை மதித்து நடந்துகொள்ளவேண்டும். சுகாதாரப்பிரிவின் முடிவுகளுக்கு ஒத்தவகையில் எமது கலைக்கூடமும் சில முடிவுகளை எடுக்கவேண்டிய கடமைக்கு உட்பட்டுள்ளது.

நோய்க்கிருமியின் பாதிப்பால் சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இப்பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களை எமது கலைக்கூட வகுப்புகளுக்கும் வருவதற்கு தடைவிதிக்கப்படுகின்றது. இத்தடையானது தங்களது பாடசாலை திறக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவும். கலைக்கூடத்திற்கு வரும் மற்றவர்களுக்கும், நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுப்பதற்காகவே இம்முடிவு எடுக்கப்படுகிறது.