You are here

தலைமை நிருவாகம்

 தலைமை நிருவாகம் 7 நிருவாக உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். இது நோர்வேயில் இயங்கும் அனைத்து அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடங்களையும் ஒருங்கிணைத்து நிருவகிக்கும். கல்விக்கழு, கலைக்குழு, விளையாட்டுக்குழு ஆகியன தலைமை நிருவாகக் கட்டமைப்பின்கீழ் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படும். குழுக்கள் ஒவ்வொன்றும் தாங்கள் இனங்காணும் புதிய செயல்வடிவங்களை தலைமை நிருவாகத்தின் ஒத்துழைப்போடும் அனுசரணையோடும் நடைமுறைக்கு கொண்டுவரும். தலைமை நிருவாகத்தின் செயற்பாட்டு உறுப்பினர்கள்,  வளாகங்களின் பரிந்துரையோடு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் சுழற்சி முறையில் தெரிந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பணிக்காலம் மூன்று (3) வருடங்களாக இருக்கும்.