வணக்கம்,
அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகள் 2021 கதைசொல்லும் நிகழ்வு, பேச்சு நிகழ்வுகள் மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வுகளில் பங்குகொண்டு சிறப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வகுப்பு நடைபெற்ற நேரம் இணையவழியில் காண்பித்து தற்போது மாணவர்களின் இணையவழித் தொடர்பாடலில் (Chat-இல்) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: தைத்திருநாள் நிகழ்வுகள் மற்றும் மாவீரர் ஓவியம் வரைதல் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் பின்பு வழங்கப்பட்டும்.
வணக்கம்,
அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகளின் அழைப்புகளை அந்தந்த வகுப்புக்களுக்கான வைபர் குழுமங்களிலும் நிகழ்வுகளில் பங்குகொள்ளும் மாணவர்களின் இணையமுற்றத்திலும்(Teams) தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும். சிக்கல் ஏற்படின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.
வணக்கம்,
இன்று மாலை 5 மணிக்கும் 5.30 மணிக்கும் இடையில் மழலையர் மற்றும் சிறுவர் ஒளிவடிவப் பாடலுக்கான படப்பிடிப்பு ஓசன் பாடசாலையில் இடம்பெறும். இதில் பங்குகொள்ளவிரும்பும் பிள்ளைகளை கொறோணா விதிமுறைகளுக்கமைய முன்பதிவு செய்தல் வேண்டும். எனவே தயவுசெய்து வரவிரும்பும் பிள்ளைகளின் பதிவை மாலை 4 மணிக்கு முன்னதாக 99390224 என்ற இலக்கத்தினூடாக மேற்கொள்ளவும். இப்பாடல் அன்னை பூபதித் தமிழ்க் கலைக்கூத்தின் தயாரிப்பு எனக் குறிப்பிடுகின்றோம். குறுகிய நேர அவகாசம் வழங்குவதை எண்ணி வருந்துகின்றோம். புரிதலுக்கு நன்றி.