Home

19.04.2020 இன்று அன்னை பூபதி நினைவு நாள்.

தமிழீழ நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் நினைவு நாள். இன்று நாம் இணைய முற்றத்தில் (இணையவழிக் கல்வியில்) கால் எடுத்துவைத்துள்ளோம். எமக்கான எதிர்கால கல்வி வழிமுறைகளில் இணைய முற்றம்(இணையகல்வி) இணைந்து பயணிக்கும்

 

நாட்டுப்பற்றாளர் தினத்தில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதுடன், இடர்களும் இன்னல்களும் எம்மீது திணிக்கப்படும் காலத்தில் நாம் ஒரு தேசிய இனமாக, இந்நிலைகளில் இருந்து மீண்டெழப் பணியாற்ற வேண்டும் என்பதில் எம்முடன் இணைந்து அர்ப்பணிப்புடன் தமிழ்ப் பணி செய்திடும் நிர்வாகிகளே, ஆசிரியர்களே!

 

வாரம் 16-2020 இணையவழிக்கல்வி ஆரம்பம்.

வணக்கம்,
கடந்த வாரம் தவக்கால விடுமுறைநாட்களில் (Påske ferie) ஓய்வாகப் பிள்ளைகளுடன் இருந்து மகிழ்ந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
 
இவ்வாரம் சனிக்கிழமை 18.04.2020 இலிருந்து அந்தந்த வகுப்பு  ஆசிரியர்களால் வழங்கப்பட்ட நேரத்தினடிப்படையில் Teams இனூடாகக் கல்விகற்பித்தல் ஆரம்பமாகின்றது.
 
முக்கிய கவனம்!

  • அன்னை தலைமையினால் அனுப்பப்பட்ட தகவலான Teams இல் பதிவுசெய்தல்.

 

வாரம் 15-2020 தவக்கால விடுமுறை(Påske ferie).

வணக்கம்,
11.04.2020 உயிர்த்தஞாயிறை முன்னிட்டு தவக்கால விடுமுறை (Påske ferie) ஆ(வா)க அறிவிக்கின்றோம்.
 
இனணயவழிக்கல்வி  TEAMS பாவிப்பதற்கு முதலில் செய்யவேண்டியவை:

வாரம் 14-2020. இணையவழிக் கல்வி பற்றிய முக்கிய தகவல்.

வணக்கம்,
 
இணையவழித் தமிழ்க் கல்வியை நடைமுறைப்படுத்தும் வகையில்  அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை இணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக அனைத்து மாணவர்களையும் TEAMS இல் இணைக்கும் நடைமுறையை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.  
 
இதற்கான தகவல் திரட்டும் திட்டத்தின் அடிப்படையில் பெற்றோர்களுக்கான குறுந்தகவல் (SMS) ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
 

வாரம் 13-2020.

வணக்கம்,
தவக்கால விடுமுறைவரை இணையவழித் தமிழ் - Fram til påskehøytiden Online tamil.
பெரியவெள்ளி, உயிர்த்தஞாயிறு தவக்கால விடுமுறைவரையும் அல்லது அதற்குப்பின் நோர்வேப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் வரை தாய்மொழியை இணைய வழிக்கல்வி மூலம் கற்றுப்பயனடையலாம் என அன்னை பூபதியின் சகல மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம்.

வாரம் 12-2020.

பெற்றோருக்கான வாராந்தத்தகவல் கிழமை 12-2020
 
வணக்கம்,
 
கொறோனா(Corona) என்னும் கொடூர வைரஸ் வேகமாகப் பரவும் காரணத்தினால் நோர்வேயிலும் உலகில் பெரும்பாலானா நாடுகளிலும் அனைத்து மழலையர் பூங்கா, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மண்டபங்கள், சில வேலைத்தளங்கள் இன்னும் பல மூடப்பட்டது மட்டுமல்ல பல ஒன்றுகூடல்கள், நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியனவும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றது என்பதனை அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

வாரம் 11-2020. முக்கிய அறிவித்தல் திகதி 12.03.2020

எமது வளாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவித்தல்.     12.03.2020
அன்பான பெற்றோர்களே மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களே!
வணக்கம்,
CORONA என்னும் கொடூர வைரஸ் வேகமாகப் பரவும் காரணத்தினால் நோர்வே அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு கட்டளையிட்டு ஒருசில பாடசாலைகள் மூடப்பட்டது மேலும் ஒருசில பாடசாலைகளை மூடுவதைப்பற்றி ஆலோசிப்பதை அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

• வாரம் 11 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 11-2020

• வாரம் 10 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 10-2020
கல்வி
இதுவரை நடைபெற்ற அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020 இல் பங்குகொண்ட அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் எமது பாராட்டுக்கள். ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி.

'இதுவரை நடைபெற்ற அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020 இல் பேச்சுப்போட்டி பிரிவு 3இல் எமது வளாகத்தைச் சேர்ந்த 3ஆம் வகுப்புமாணவி செல்வி. தாரா ரசிதரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் என்பதைப் பெருமையோடு அறியத்தருவதுடன் வளாகம் சார்பில் அம் மாணவிக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றோம்"

• வாரம் 9 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 09-2020

 

அனைவருக்கும் குளிர்கால விடுமுறை மிகமகிழ்ச்சியாக அமைந்திருக்குமென எதிர்பார்கின்றோம், 29.02.2020 சனிக்கிழமை பாடசாலை வழமைபோல் நடைபெறும்.

கல்வி

1. படம் பார்த்து பேசுதல் போட்டிகள் எதிர்வரும் 29.02 அன்று 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்புகளிற்கு, பாடசாலை நேரத்தில் எமது வளாகத்தில் நடைபெறும். ஏனைய வகுப்புகளிற்கு அடுத்த வாரம் நடைபெறும்.

2. அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020

• 29.02.20 சனிக்கிழமை மதியம் 3 மணி இடம்: TRVS

சிறுவர் பேச்சு பிரிவு 1

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo