Home

• வாரம் 39 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 39-2019

பொது நிகழ்வுகள்:

• கலைமகள் விழா (நவராத்திரி) 12.10.2019 காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்

இடம்; சென் பாடசாலை

பொறுப்பு - 9, 10ஆம் வகுப்புகள்

அறிவிப்பாளர்கள் - 10ஆம் வகுப்பு, பாடசாலைக் கீதம் - 4ஆம் வகுப்பு

ஒப்படை – 9ஆம் வகுப்பு

• வாரம் 38 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!    கிழமை இல. 38-2019

பொது நிகழ்வுகள்:

• 14.09.2019 அன்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவியல் அரங்கம் ராணி ஜேசுராஜா (Overlege) மற்றும் றக்சனா சிறீஸ்கந்தராஜா (MA i Phykologi) ஆகியோரால் மிகச்சிறப்பானமுறையில் நடாத்தப்பட்டது. வருகைதந்து தங்கள் நற்கருத்துக்களைத் தந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றிகள்.

• 28.09.2019 09.45-12.30 பெற்றோருக்கான நீரிழிவு நோய் பற்றிய அறிவியல் அரங்கம். நடாத்துபவர்: ராகினி மேகநாதன் (medisinskestudent I 6.året)

• வாரம் 37 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 37-2019

07.09.2019 அன்று பெற்றோர்கூட்டம் நடைபெற்றது
இவ்வளவு காலம் தேனீர்சாலை நடாத்த உதவி செய்துவந்த சில பெற்றோர் எமது வளாக யாப்பின் விதிக்கமைய தமிழர் வள மேம்பாட்டு  நிதியை செலுத்த மறுப்பதுடன், தொடர்ந்து தேனீர்சாலையை நடாத்த மறுப்பு தெரிவிப்பதால் மறு அறிவித்தல் வரும்வரை தேனீர்ச்சாலை நடைபெற மாட்டாது.
எமது வளாக மாணவ செல்வங்களின் நலன்கருதி யாரவது பெற்றோர் முன்வந்து தேனீர்சாலை நடாத்துவதை நாம் மனதார வரவேற்கின்றோம்.
ஆகவே பெற்றோர்களாகிய தாங்கள் மிக விரைவில் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறோம்.

• வாரம் 36 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 36-2019

பெற்றோர்கூட்டம்
எதிர்வரும் சனிக்கிழமை 07.09.2019 09:45 இலிருந்து மேல்மாடியில் நடைபெறும். பல முக்கிய தகவல்களுடன் இக்கூட்டம் நடைபெறவிருப்பதால் பெற்றோர்கள் அனைவரும் இதில் பங்கேற்பது மிக அவசியம்.

 

• வாரம் 35 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 35-2019

 24.08.19 அன்று பாடசாலை மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் புதிய பல சிறப்பான திட்டங்களுடன்இ புதிய கல்வியாண்டை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.   

கல்வி
ஆசிரியர்கள் பல புதிய சிந்தனைகளுடனும் புதிய
பாடப்புத்தகங்களுடனும் தமது கற்பித்தல் பணியை
தொடங்கியுள்ளார்கள்.

31.08.19 அன்றும் விலைப்பட்டியலுடன் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் பாடசாலை மண்டபத்தில் வைக்கப்படும். தேவையானவர்கள் அதற்குரிய தொகையை பணமாகவோ அல்லது vipps மூலமாகவோ செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

• வாரம் 34 -2019

பெற்றோருக்கான தகவல்கள்
புதிய கல்வியாண்டு 24.08.2019 அன்று காலை 09:30 மணிக்கு ஆரம்பமாகி 12:00 மணிக்கு முடிவடையும். தேநீர்ச்சாலை நடைபெறும்.
புதிய மாணவர்கள் பதிவு மணி 09:00 லிருந்து நடைபெறும்
பாடப் புத்தகங்கள் 7-10 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறையில் ஆசிரியராலும்  பாலர் வகுப்பு- 6 ஆம் வகுப்பு புத்தகங்கள் கீழ் மண்டப நூலகத்திலும் விற்பனையாகும். தயவு செய்து சரியான தொகையைக் கொண்டு வரவும்.
உயர்கல்வித் தரத்துக்கான தமிழ்மொழித்தேர்வுத் தயார்படுத்தல் வகுப்புகள் 31.08.19 அன்று 11ம் ஆரம்பமாகும்.
கலை வகுப்புகள் வழமையான வகுப்புகள் பற்றிய விபரங்கள்

• வாரம் 25 -2019

வணக்கம்,
எமது வளாக நிர்வாகத்தின் தெளிவான திட்டமிட்ட முறையினாலும் பெற்றோரின் பங்களிப்பினாலும்  விளையாட்டுப்போட்டி மற்றும் கோடைகால ஒன்று கூடல் ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்று 2018-2019 கல்வியாண்டு பூர்த்தியடைந்துள்ளது.

எமது வளாகத்தின் அச்சாணியாக அர்ப்பணிப்போடு எம் தாய்மொழியாம் தமிழ் மொழியை எமது சிறார்களிற்கு வழங்கி வரும் ஆசிரிய பெருந்தகைகளிற்கு பெற்றோர் சார்பிலும் நிர்வாக சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

• வாரம் 23 -2019

பெற்றோருக்கான தகவல்கள்

விளையாட்டுப்போட்டி - 02.06.2019 - ஞாயிற்றுக்கிழமை

எமது மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2019 வெகுசிறப்பாக நடந்தேறியதையிட்டு மனநிறைவடைகின்றோம்.

 

தமிழர் சிறார் இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் (Tamilsk barn og ungdom idrettsklubb Norge) ஆதரவில், அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட லோறன்ஸ்கூக், வைத்வேத் வளாகங்களினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி திட்டமிட்டவாறு சிறப்பாக நடைபெற்றது.

 

• வாரம் 22 -2019

பெற்றோருக்கான தகவல்கள்!

 

 விளையாட்டுப்போட்டி 02.06.2019

 

பயிற்சி நாள் 

30.05.19 kl 18-20 på Stovnerbane

 

Tamilsk barn og ungdom idrettsklubb Norge - Vipps nr - 22162 

 

7ம், 8ம் வகுப்பு பெற்றோர்கள் பொறுப்பேற்று விளையாட்டுப்போட்டியை நடாத்துவார்கள்.

இந்த ஒழுங்கை விளையாட்டுகுழு மேற்கொள்ளும்.

 

அங்கத்துவர் கட்டணம், தவணை கட்டணம், தமிழர் மேம்பாட்டு நிதி 

• வாரம் 21 -2019

பெற்றோருக்கான தகவல்கள்!

 

அங்கத்துவர் கட்டணம், தவணை கட்டணம், தமிழர் மேம்பாட்டு நிதி 

- 100 kr அங்கத்துவருக்கான கட்டணம் நேரடியாக தலைமை   வளாகத்திற்கு செலுத்துமாறு வேண்டுகின்றோம்;(60730524199 med kid nr.)

- 700 kr தவணை கட்டணம் - வங்கி இலக்கம் 1503 25 88384 ற்கு செலுத்துமாறு வேண்டுகின்றோம். (Vipps 100740 - 12,25 kr வங்கிச்செலவு)

- 200 kr தமிழர் மேம்பாட்டு நிதி - வங்கி இலக்கம் 1503 25 88384 ற்கு செலுத்துமாறு வேண்டுகின்றோம். (Vipps 100740 -4 kr வங்கிச்செலவு)

 

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo