Home

• வாரம் 47 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 47-2019

 

மாவீரர் நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் எமது வளாகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி செல்வி. காத்தியா மோகன்ராஜ் வெற்றியாளரில் ஒருவராகத் தெரிவாகியுள்ளார் என்பதைப் பெருமையோடு      அறியத்தருவதுடன் வளாகம் சார்பில் அம் மாணவிக்குப் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்.

கடந்த சனிக்கிழமை 16.11.19 கல்விக்குழு பெற்றோருடன் சந்திப்பில் பங்கேற்ற பெற்றோருக்கு மிக்க நன்றி. பிள்ளைகளின் கல்வி தொடர்பாக பெற்றோர்களாகிய தங்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இச்சந்திப்பானது திருப்தியளித்திருக்குமென நம்புகின்றோம். 

 

• வாரம் 46 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 46-2019

 

எதிர்வரும் சனிக்கிழமை 16.11.19 கல்விக்குழு பெற்றோருடன் சந்திப்பு: 

கல்வி தொடர்பாக பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடைபெறும்.

 

நத்தார்விழா பற்றிய தகவல்! 

 

தவணை கட்டணம் பற்றிய விபரம் குறுந்தகவல் எல்லோருக்கும் கிடைத்திருக்குமென நம்புகின்றோம். கட்டண விபரங்கள் மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கப்படும். கிடைக்காதவர்கள் நிர்வாக கணக்காளருடன் தொடர்புகொள்ளவும் சுரேஷ்குமார் ராமலிங்கம் 46831513

 

• வாரம் 45 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 45-2019

 

எதிர் வரும் சனிக்கிழமை 09.11.2019; மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி நடாத்தப்படும் நேரம்: 12.45-13.45

- போட்டியாளர்களுக்கு 1மணித்தியாலம் வழங்கப்படும்.

- போட்டித்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேணடும். 

- வரையப்போகும் ஓவியத்தை பயிற்சி செய்துகொள்ளலாம் ஆனால் பயிற்சி செய்த தாள் வகுப்பறைக்குள் கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டார்கள். 

- போட்டிக்கான தாளை முழுமையாக பயன்படுத்தவேண்டும்.(வர்ணம் தீட்டியிருக்கவேண்டும்) 

• வாரம் 44 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 44-2019

 

• வாரம் 43 -2019

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட நிர்வாகத்தின் யாப்பு விதிகளும், கட்டண முறைகளும் அனைத்து வளாகங்களின் பங்களிப்போடு வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுபவை.

இந்த நடைமுறைகளை மாற்றவேண்டும் என அங்கத்தவர் விரும்பினால் அதற்கான வழிமுறை கலந்துரையாடலும் பொதுக்கூட்டத்திற்குக் குறித்த கரிசனைகளை தக்கமுறையில் எடுத்துச்செல்வதுமே ஆகும். இதுவே பங்குபெறும் ஜனநாயக முறைசார்ந்த அறமாகும்.  

• வாரம் 42 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்! கிழமை இல. 42-2019
அங்கத்துவர் கட்டணம், தவணைக் கட்டணம், தமிழர் மேம்பாட்டு நிதி.
 100 kr அங்கத்துவருக்கான கட்டணம். இதனை நேரடியாக தலைமை   நிர்வாகத்திற்குச் செலுத்துமாறு வேண்டுகின்றோம்;.
(6073 05 24199 med kid nr.)
700 kr - ஒரு மாணவருக்கான தவணைக் கட்டணம் Høst 2019. இதனை வங்கியிலக்கம் 1503 25 88384 இற்கு 31.10.2019  முன்பாக செலுத்துமாறு வேண்டுகின்றோம். 
200 kr ஒரு மாணவருக்கான தமிழர் மேம்பாட்டு நிதி Høst 2019. இதனை வங்கியிலக்கம் 1503 25 88384 இற்கு  31.10.2019 முன்பாக செலுத்துமாறு வேண்டுகின்றோம். 
Vipps 100740

• வாரம் 41 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 41-2019

பொது நிகழ்வுகள்:

கலைமகள் விழா (நவராத்திரி) 12.10.2019 காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

இடம்; சென் பாடசாலை

பொறுப்பு - 9, 10ஆம் வகுப்புகள்

அறிவிப்பாளர்கள் - 10ஆம் வகுப்பு, பாடசாலைக் கீதம் - 4ஆம் வகுப்பு

நிகழ்ச்சிநிரல் - மழலையர் வகுப்பு – 8ம் வகுப்பு

ஒப்படை – 9ஆம் வகுப்பு

12.10.2019 அன்று கலைமகள் விழா முடிந்துவரும் முதல் சனிக்கிழமை நன்நாளும்அமைந்திருப்பதால் அன்று ஏடுதொடக்கலாம். 

கலைமகள் விழா அன்று 2016 ம் ஆண்டு பிறந்த சிறார்களும் பாலர் வகுப்பை ஆரம்பிக்கலாம்.

• வாரம் 40 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 40-2019
பொது நிகழ்வுகள்:

 அனைவருக்கும் இனிய இலையுதிர்காலம்
இரண்டாம் உலகப்போரில் நோர்வே சுவீடன் நாடுகளில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமாக உருளைகிழங்கு இந்நாடுகளில் நன்றாக பயிரிடப்பட்டது. வைகாசியில் பயிரிட்டு ஜப்பசியில் கிழங்கை கிண்டுவார்கள்இ கிண்டிய கிழங்கை பொறுக்கி சேகரிப்பற்காக பிள்ளைகளின் உதவி பெற்றோருக்கு தேவைப்பட்டது இதன் காரணமாக கிழமை 40 பாடசாலை விடுமுறை இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது.
இந்த நடைமுறை எங்களது மாணவசெல்வங்களுக்கும் குதுகலமான விடுமுறையாக அமைய வாழ்த்துகின்றோம்.

• வாரம் 39 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 39-2019

பொது நிகழ்வுகள்:

• கலைமகள் விழா (நவராத்திரி) 12.10.2019 காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்

இடம்; சென் பாடசாலை

பொறுப்பு - 9, 10ஆம் வகுப்புகள்

அறிவிப்பாளர்கள் - 10ஆம் வகுப்பு, பாடசாலைக் கீதம் - 4ஆம் வகுப்பு

ஒப்படை – 9ஆம் வகுப்பு

• வாரம் 38 -2019

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!    கிழமை இல. 38-2019

பொது நிகழ்வுகள்:

• 14.09.2019 அன்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவியல் அரங்கம் ராணி ஜேசுராஜா (Overlege) மற்றும் றக்சனா சிறீஸ்கந்தராஜா (MA i Phykologi) ஆகியோரால் மிகச்சிறப்பானமுறையில் நடாத்தப்பட்டது. வருகைதந்து தங்கள் நற்கருத்துக்களைத் தந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றிகள்.

• 28.09.2019 09.45-12.30 பெற்றோருக்கான நீரிழிவு நோய் பற்றிய அறிவியல் அரங்கம். நடாத்துபவர்: ராகினி மேகநாதன் (medisinskestudent I 6.året)

Pages

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo