Home

You are here

அறிவித்தல்

வாரம் 13-2020.

வணக்கம்,
தவக்கால விடுமுறைவரை இணையவழித் தமிழ் - Fram til påskehøytiden Online tamil.
பெரியவெள்ளி, உயிர்த்தஞாயிறு தவக்கால விடுமுறைவரையும் அல்லது அதற்குப்பின் நோர்வேப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் வரை தாய்மொழியை இணைய வழிக்கல்வி மூலம் கற்றுப்பயனடையலாம் என அன்னை பூபதியின் சகல மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம்.

வாரம் 12-2020.

பெற்றோருக்கான வாராந்தத்தகவல் கிழமை 12-2020
 
வணக்கம்,
 
கொறோனா(Corona) என்னும் கொடூர வைரஸ் வேகமாகப் பரவும் காரணத்தினால் நோர்வேயிலும் உலகில் பெரும்பாலானா நாடுகளிலும் அனைத்து மழலையர் பூங்கா, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மண்டபங்கள், சில வேலைத்தளங்கள் இன்னும் பல மூடப்பட்டது மட்டுமல்ல பல ஒன்றுகூடல்கள், நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியனவும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றது என்பதனை அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

வாரம் 11-2020. முக்கிய அறிவித்தல் திகதி 12.03.2020

எமது வளாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவித்தல்.     12.03.2020
அன்பான பெற்றோர்களே மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களே!
வணக்கம்,
CORONA என்னும் கொடூர வைரஸ் வேகமாகப் பரவும் காரணத்தினால் நோர்வே அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு கட்டளையிட்டு ஒருசில பாடசாலைகள் மூடப்பட்டது மேலும் ஒருசில பாடசாலைகளை மூடுவதைப்பற்றி ஆலோசிப்பதை அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

• வாரம் 11 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 11-2020

• வாரம் 10 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 10-2020
கல்வி
இதுவரை நடைபெற்ற அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020 இல் பங்குகொண்ட அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் எமது பாராட்டுக்கள். ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி.

'இதுவரை நடைபெற்ற அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020 இல் பேச்சுப்போட்டி பிரிவு 3இல் எமது வளாகத்தைச் சேர்ந்த 3ஆம் வகுப்புமாணவி செல்வி. தாரா ரசிதரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் என்பதைப் பெருமையோடு அறியத்தருவதுடன் வளாகம் சார்பில் அம் மாணவிக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றோம்"

• வாரம் 9 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 09-2020

 

அனைவருக்கும் குளிர்கால விடுமுறை மிகமகிழ்ச்சியாக அமைந்திருக்குமென எதிர்பார்கின்றோம், 29.02.2020 சனிக்கிழமை பாடசாலை வழமைபோல் நடைபெறும்.

கல்வி

1. படம் பார்த்து பேசுதல் போட்டிகள் எதிர்வரும் 29.02 அன்று 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்புகளிற்கு, பாடசாலை நேரத்தில் எமது வளாகத்தில் நடைபெறும். ஏனைய வகுப்புகளிற்கு அடுத்த வாரம் நடைபெறும்.

2. அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020

• 29.02.20 சனிக்கிழமை மதியம் 3 மணி இடம்: TRVS

சிறுவர் பேச்சு பிரிவு 1

• வாரம் 8 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 08-2020

• வாரம் 7 -2020

பெற்றோருக்கான தகவல்கள்

இவ்வருட ஆண்டுக்கூட்டம் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி!

08.02.2020 ஆண்டுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்
திரு.விஜயன் யோகநாதன்,
சந்திரநிதி குண்டுமணி,
லூர்து மேரி,
பிருந்தா பரமேஸ்வரன் அவர்கள்
ஆனாலும் திரு.விஜயன் யோகநாதன் தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 

 

15.02.2020 

• வாரம் 6 -2020

பெற்றோருக்கான தகவல்கள்

08.02.2020: வருடாந்தப் பொதுக்கூட்டம்.

இடம்: ஓசன் பாடசாலை, 1473 லோறன்ஸ்கூக்

காலம்: 08.02.2020, சனிக்கிழமை

நேரம்: 09:45

 

நிகழ்ச்சி நிரல்:

 

 ஆரம்பம் - Åpning av møtet.

 கூட்ட நடாத்துநர், கூட்ட அறிக்கை எழுதுநர் தெரிவு - Valg av ordstyrer, møte-referent

 கூட்ட அழைப்பிற்கான அங்கீகாரம் பெறல் - Godkjenning av møteinnkalling     og saksliste

 நிதியறிக்கை 2019 சமர்ப்பித்தல் - Regnskapberetning 2019

 வரவு-செலவுத்திட்டம் 2020 சமர்ப்பித்தல் - Budsjett og handlingsplan 2020

• வாரம் 05 -2020

பெற்றோருக்கான தகவல்கள்

01.02.2020: ஓவியப்போட்டி- அனைத்து வகுப்புகளிற்கும் (தலைப்புகள் விபரம் கீழே)
                    உறுப்பெழுத்துப்போட்டி - பாலர்(ஆரம்பம்) 1ஆம் , 2ஆம் வகுப்புகள்
         கட்டுரைபோட்டி - 5ம் - 10; ஆம் வகுப்புகள் ((தலைப்புகள் விபரம் கீழே)
                   பாடசாலை நேரத்தில் வகுப்புகளில் நடைபெறும்

ஓவியப்போட்டி

பாலர்(ஆரம்பவகுப்பு) மற்றும் 1ம் வகுப்புகள்:
       வழங்கப்படும் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டுதல்

2ம், 3ம், 4ம் வகுப்புக்கள்
       மாணவர்கள் விரும்பிய ஓவியத்தை வரைதல்

Pages

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo