பெற்றோருக்கான வாராந்தத் தகவல்- வாரம் 07 - 2022
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த வாரம், வாராந்தத் தகவலை மின்னஞ்சல் மூலம் வழமை போல் அனுப்பமுடியவில்லை. மன்னிக்கவும்.
கல்வி:- 19.02.22 சனிக்கிழமை 09.30 -12.30 நேரடியாக, ஓசன் பாடசாலையினரால் வழங்கப்பட்ட கொரோனா விதிமுறைகளுக்கமைய நடைபெறும்.
கலைவகுப்புகள் 12.45- 13.45 வரை நடைபெறும்.
மாணவர்கள் உள்ளே அணியும் காலணிகளை (Innesko)எடுத்துவருதல் வேண்டும்.
மாணவர்களுக்குத் தேவையான உணவு, நீர், பாடசாலை உபகரணங்களைக் கவனித்து அனுப்பவும்.