Home

You are here

• வாரம் 8 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 08-2020

கடந்த சனிக்கிழமை 15.02.2020 அன்று திட்டமிட்டபடி பேச்சுப்போட்டி, கதைசொல்லும் போட்டி, திருக்குறட்போட்டி ஆகியன பல ஆண்டுகளின் பின்பு மிகச்சிறப்பான முறையில் எமது வளாகத்தில் நடந்தேறியுள்ளது. இதில் பங்குபற்றிய அனைத்து மாணவச்செல்வங்களும் மிகச்சிறப்பாக அனைவரும் பெருமை கொள்ளும் வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுக்களும். ஊக்குவிக்க வந்த பெற்றோர்களுக்கும் நடுவராக நின்றுதவிய எமது வளாக முன்னால் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் முன்னால் ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கின்றோம். 

குறிப்பு: தெரிவாகிய மாணவர்களின் விபரங்கள் அந்தந்த வகுப்புக்கான வைபர் குழுமங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் பங்குகொள்ளும் மாணவர்களின் பெயர்விபரங்களை எம்மால் அன்னை முற்றத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.  

நிர்வாகப் பொறுப்புப்பகிர்வு.

08.02.2020 ஆண்டுக்கூட்டத்தில் தெரிவான புதிய நிர்வாக உறுப்பினர்களுடனான முதலாவது நிர்வாகக்கூட்டமும் பொறுப்புகள் பகிர்வும் இன்று 15.02.2020 நடைபெற்றது.

பின்வரும் பொறுப்புகள் புதிய நிர்வாக உறுப்பினர்களால் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

1. வளாகப்பொறுப்பாளர் -திரு.வித்யாதரசர்மா இராதாகிருஷ்ணராஜாக்குருக்கள்

2. உதவி வளாகப்பொறுப்பாளர் மற்றும் கல்விப்பொறுப்பாளர் - திரு.பரணீதரன் நவரட்ணம்

3. நிதிப்பொறுப்பாளர் - திரு.சுரேஸ்குமார் இராமலிங்கம்

4. அலுவலகப்பொறுப்பாளர் - செல்வி.அபித்தா ஜெகதாஸ்

5. உதவி கல்வி மற்றும் அலுவலகப்பொறுப்பாளர்- திருமதி.பிருந்தா பரமேஸ்வரன் 

6. கலைப்பொறுப்பாளர் - திருமதி.லூர்து மேரி இளங்கீரன்

7. விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் - திரு.சந்திரநிதி குண்டுமணி

8வது உறுப்பினராக திரு.விஜயன் யோகநாதன் என்பவர் ஆண்டுக்கூட்டத்தில் தெரிவாகி பின்பு தானே தனது தனிப்பட்ட காரணத்தினால் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். 

 

இதுவரை அன்னை லோறன்ஸ்கூக் வளாகத்தில் 8 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகமே இயங்கிவந்துள்ளது. இத்தடவை 7 உறுப்பினர்களைக் கொண்டு வளாகத்தை நடாத்துவோம் என புதிய நிர்வாக உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளார்கள்;.

இதுவரை தமது சேவையை மிகச்சிறப்பாகச் செய்த நிர்வாக உறுப்பினர்களான 

திரு. பாக்யநாதன் செல்லையா (வளாகப்பொறுப்பாளர்), 

திருமதி. திருச்செல்வி நந்தகுமார் (கல்விப்பொருப்பாளர்), திருமதி. பாணுசல்யா பெர்னாண்டோ (விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்), 

திரு. தினேஸ்ராஜன் செல்வமாணிக்கராசா (கலைப்பொறுப்பாளர்) ஆகியோருக்கும் தெரிவுக்குழுவில் தமது சேவையைச் சிறப்பாக வழங்கிய திரு. இளங்கீரன் பெர்ணாண்டோ, திரு. திலகேசன் சண்முகநாதன் மற்றும் திருமதி. இந்துமதி நவரட்ணம் ஆகியோருக்கும் கணக்காய்வாளராக பணியாற்றிய திருமதி. மயூரா தினேஸ்ராஜன் அவர்களுக்கும் வளாகம் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துநிற்கின்றோம்.

தெரிவுக்குழுவில் புதிதாக பெற்றோர் சார்பில் இணைந்தவர்கள்:

திரு.சுரேஸ் முருகேசு, திரு.அரவிந்தன் இராமகிருஷ்ணன், ஆசிரியர்கள் சார்பில் யார் என்பதை பின்பு அறியத்தரப்படும். புதிய கணக்காய்வாளர்:திரு. ஜெயராஜ் கந்தையா வளாகத்தில் புதிதாக இணைந்தவர்கள் அனைவரையும் வரவேற்றுக்கொள்கின்றோம். இத்துடன் 08.02.2020 நடைபெற்ற ஆண்டுக்கூட்டத்தின் கூட்ட அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது. ஆதனை எழுதிய திருமதி. சுபதா ஜெயநந்தன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றோம்.  

அனைவரிற்கும் இக் குளிர்கால விடுமுறை மிகமகிழ்ச்சியாக அமைய வாழ்த்துகின்றோம். 23.02.2020 சனிக்கிழமை பாடசாலை குளிர்கால விடுமுறை நாள்.

 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo