Home

You are here

• வாரம் 9 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!

கிழமை இல. 09-2020

 

அனைவருக்கும் குளிர்கால விடுமுறை மிகமகிழ்ச்சியாக அமைந்திருக்குமென எதிர்பார்கின்றோம், 29.02.2020 சனிக்கிழமை பாடசாலை வழமைபோல் நடைபெறும்.

கல்வி

1. படம் பார்த்து பேசுதல் போட்டிகள் எதிர்வரும் 29.02 அன்று 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்புகளிற்கு, பாடசாலை நேரத்தில் எமது வளாகத்தில் நடைபெறும். ஏனைய வகுப்புகளிற்கு அடுத்த வாரம் நடைபெறும்.

2. அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020

• 29.02.20 சனிக்கிழமை மதியம் 3 மணி இடம்: TRVS

சிறுவர் பேச்சு பிரிவு 1

சிறுவர் பேச்சு பிரிவு 2

சிறுவர் கதை சொல்லுதல

• 01.03.20  ஞாயிறு முற்பகல் 11 மணி   இடம்: TRVS

    சிறுவர் பேச்சு பிரிவு 3

       சிறுவர் பேச்சு பிரிவு 4

    சிறுவர் பேச்சு பிரிவு 5

    கவிதை மொழிதல் ( எல்லாப் பிரிவினர்)

    பெரியவர்கள் கதை சொல்லுதல்

 

• திருக்குறள் இறுதிப்போட்டி 28.03.2020‬‬‬‬

  மேலதிக விபரங்களுக்கு:  http://annai-tamilmutram.annai.no

 

3. புலன்மொழித்தேர்வு 02.05.2020 அதற்கான பதிவு விபரங்கள் விரைவில் அறியத்தரப்ப்.டும 

 

கலை

சித்திரைவிழா மற்றும் அன்னைபூபதி நினைவுநாள் 18.04.2020.

 

விளையாட்டு

விளையாட்டுப்போட்டி 13.06.2020. இதற்கான குழு மற்றும் இல்லப்பொறுப்பாளர்கள் தெரிவு எதிர்வரும் பெற்றோர் 

கூட்டத்தில் நடைபெறும். விளையாட்டுப்போட்டிக்கான குழுவிலோ அல்லது இல்லப்பொறுப்பாளர்களாகவோ இணைந்து உதவிபுரிய விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சலினூடாக அறியத்தரவும்.

மின்னஞ்சல் முகவரி: lorenskog.annai@gmail.com

 

07.03.2020 அன்று பெற்றோர்கூட்டம் பல முக்கிய தகவல்களுடன் நடைபெறும். 

 

பெற்றோர்குழு

15.02.2020 சனிக்கிழமை அன்று தவறான புரிதலினாலோ என்னவோ பெற்றோர்சார்பில் எவரும் இடைவேளைக்காவலாளிகளாக நிற்கவில்லை. எனவே இவ்வாரத்திலிருந்து நாம் கவனமாகச் செயற்படவேண்டும். இவ்வார இடைவேளைக் காவலாளிகளாக நிற்கும் பொறுப்பு 7ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கே உரியது. வகுப்புப் பிரதிநிதிகள் தங்களைக்கேட்கும்போது அவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம். 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo