Home

You are here

• வாரம் 10 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 10-2020
கல்வி
இதுவரை நடைபெற்ற அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020 இல் பங்குகொண்ட அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் எமது பாராட்டுக்கள். ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி.

'இதுவரை நடைபெற்ற அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020 இல் பேச்சுப்போட்டி பிரிவு 3இல் எமது வளாகத்தைச் சேர்ந்த 3ஆம் வகுப்புமாணவி செல்வி. தாரா ரசிதரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் என்பதைப் பெருமையோடு அறியத்தருவதுடன் வளாகம் சார்பில் அம் மாணவிக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றோம்"

1. அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020
 திருக்குறள் இறுதிப்போட்டி 28.03.2020‬‬‬‬
  மேலதிக விபரங்களுக்கு:  http://annai-tamilmutram.annai.no
2. புலன்மொழித்தேர்வு 02.05.2020/அனைத்துலகத்தேர்வு 06.06.2020 அதற்கான பதிவு விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.     
                     

07.03.2020 சனிக்கிழமை அன்று பெற்றோர்கூட்டம் நடைபெறும்.
  நிகழ்ச்சிநிரல் - இவ்வாராந்தத்தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கலை சித்திரைவிழா மற்றும் அன்னைபூபதி நினைவுநாள் 18.04.2020.

• இந்நிகழ்விற்குப்பொறுப்பானவர்கள் - 5ஆம் மற்றும் 6ஆம் வகுப்புகள், இவர்களுடன் பெற்றோர்குழுவினர்.    
       

விளையாட்டு
விளையாட்டுப்போட்டி 13.06.2020. பொறுப்பு - 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகள்.
விளையாட்டுப்போட்டிக்கான குழுவிலோ அல்லது இல்லப்பொறுப்பாளர்களாகவோ இணைந்து உதவிபுரிய விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சலினூடாக அறியத்தரவும்.
மின்னஞ்சல் முகவரி: lorenskog.annai@gmail.com

பெற்றோர்குழு
இவ்வார இடைவேளைக் காவலாளிகளாக நிற்கும் பொறுப்பு 8ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கே உரியது. வகுப்புப் பிரதிநிதிகள் தங்களைக்கேட்கும்போது அவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.

பெற்றோர்கூட்டம்

திகதி: 07.03.2019     
நேரம்: 09.45
இடம்: மேல்மாடி
நிகழ்ச்சி நிரல்

• அகவணக்கம்
• நிர்வாக உறுப்பினர்கள் அறிமுகம்
• கல்வி
- புலன் மொழித்தேர்வு 02.05.2020ஃஅனைத்துலகத்தேர்வு 06.06.2020  கட்டணம் 50 குரோணர்கள்.
• கலை
- சித்திரைவிழா மற்றும் அன்னைபூபதி நினைவுநாள் 18.04.2020
• விளையாட்டுப்போட்டி 13.06.2020
- இல்லப்பொறுப்பாளர்கள் தெரிவு
- விளையாட்டுப்போட்டிக்கான குழு – தெரிவு

• தேநீர்ச்சாலை
- நிதிக்குழு – தெரிவு
• ஓசன் பாடசாலை 
• பெற்றோர்குழுவின் கணக்கறிக்கை
• இதரவிடையம்

 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo