Home

You are here

• வாரம் 11 -2020

பெற்றோருக்கான வாராந்தத் தகவல்கள்!
கிழமை இல. 11-2020
முக்கிய அறிவித்தல்: CORONA என்னும் கொடூர வைரஸ் பரவும் காரணத்தினால் அரசாங்கத்தின் கட்டளையினால் மூடப்பட்ட பாடசாலைகள்(உதாரணம்: Fjellhamarskole) செல்லும் எமது வளாக மாணவர்களை அப்பாடசாலைகள் மீண்டும் திறக்கும்வரை (நோர்வே சுகாதார அமைச்சினால் மறு அறித்தல் வரும்வரை) தமிழ்ப்பாடசாலைக்கு சமூகம் தருவதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்பதை அறிவிக்கின்றோம். இதனால் தமது பாடத்திட்டத்தில் பின்தங்கி நிற்கும் அம்மாணவர்ளுக்குத் தேவையேற்படின் மேலதிக கவனிப்பினை எமது ஆசிரியர்கள் பின்பு மேற்கொள்வார்கள். இக்காரணத்தினால் தமிழ்ப்பாடசாலை வரமுடியாமல் போன தங்கள் பிள்ளைகளின் பெயர்விபரங்களை அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் தந்துதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். புரிந்துணர்வுக்கு நன்றி. அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு சிறிய சுகையீனம் வந்தால்கூட வீட்டில் வைத்து மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். எம்மையும் எம்மைச்சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்போம்.   

07.03.2020 சனிக்கிழமை அன்று பெற்றோர்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம் பெற்றோர்களினாலும் நிர்வாகத்தினராலும் பிள்ளைகளின் கல்விக்கு மிகமுக்கியத்துவமளிக்கப்பட்டே நடைபெற்றது. பெற்றோர்களினால் முன்வைக்கப்பட்ட அனைத்து கருத்துக்களையும் நாம் உள்வாங்கியுள்ளோம். இக்கூட்டத்திற்கு வருகைதந்து கருத்துக்களை வழங்கி ஒத்துழைப்புத்தந்த அனைத்துப் பெற்றோருக்கும் எமது மனமார்ந்த நன்றி.
அன்றாட தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்வதற்கான தபால்ப்பெட்டி - விபரம் இவ்வாராந்தத்தகவலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தெரிவுக்குழுவில் புதிதாக ஆசிரியர்கள் சார்பில் இணைந்தவர் செல்வி. கஜனி உதயகுமார் ஆவார்.

கல்வி
1. அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் 2020
• திருக்குறள் இறுதிப்போட்டி 28.03.2020‬‬‬‬
  மேலதிக விபரங்களுக்கு: http://annai-tamilmutram.annai.no
2. புலன்மொழித்தேர்வு 02.05.2020ஃஅனைத்துலகத்தேர்வு 06.06.2020 இதற்கான கட்டணம் 50குறோணர்கள். எமது மாணவர்கள் அனைவரும் பங்குகொள்வது மிகச்சிறப்பு.  
கலை
சித்திரைவிழா மற்றும் அன்னைபூபதி நினைவுநாள் 18.04.2020.
• இந்நிகழ்விற்குப்பொறுப்பானவர்கள் - 5ஆம் மற்றும் 6ஆம் வகுப்புகள், இவர்களுடன் பெற்றோர்குழுவினர்.
• நேரம்: 09:45-12:00. இடம்: Kjenn ungdomsskole, Hasselveien 4, 1470 Lørenskog
• நிகழ்ச்சிகள் தயாரிப்பு: வகுப்பு மற்றும் கலை ஆசிரியர்கள்.
• ஒழுங்கமைப்பு: கலைப்பொறுப்பாளர் 
விளையாட்டு
• விளையாட்டுப்போட்டி 13.06.2020
- இல்லப்பொறுப்பாளர்கள்
1. மஞ்சள் பூபதி இல்லம்: திரு. துராதரன் கணேசஷமூர்த்தி (சுரேஷ்)
2. சிவப்பு திலீபன் இல்லம்: திரு. விஜயன் யோகநாதன்
- விளையாட்டுப்போட்டிக்கான குழு
1. திருமதி. சங்கீதா சத்தியரூபன்
2. திருமதி. பாணுசல்யா பெர்னாண்டோ (முன்னால் விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர்)
3. திரு. ஜேசுதாஸ் ஞானதாஸ் (ஜோய்)
4. திரு. பாக்கியநாதன் செல்லையா (முன்னால் வளாகப்பொறுப்பாளர்)
5. திரு. பிரான்சிஸ் றெஜினோல்ட்
6. திரு. சந்திரநிதி குண்டுமணி (விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் - நிர்வாகம்)
- பொறுப்பு - 7ஆம் மற்றும் 8ஆம் வகுப்புகள். இவர்களுடன் பெற்றோர்குழுவினர். 

தேநீர்ச்சாலை
நிதிக்குழு
1. திரு. தேவகன் பரமானந்தம்
2. திரு. குனேந்திரன் அரியதாசன்
3. திரு. விமலன் கனகலிங்கம்
4. திரு. இலங்கீரன் பெர்னாண்டோ
5. திரு. சுரேஷ்குமார் இராமலிங்கம் (கணக்காளர்-நிர்வாகம்)

பெற்றோர்குழு
நிர்வாகம் பெற்றோர்குழுவுடனான சந்திப்பு 14.03.2020 நேரம்: 09:45-10:30.

இவ்வார பாடசாலை முழுநேரக் காவலாளிகளாக நிற்கும் பொறுப்பு 9ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கே உரியது. வகுப்புப் பிரதிநிதிகள் தங்களைக்கேட்கும்போது அவர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo