Home

You are here

வாரம் 11-2020. முக்கிய அறிவித்தல் திகதி 12.03.2020

எமது வளாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவித்தல்.     12.03.2020
அன்பான பெற்றோர்களே மற்றும் மதிப்பிற்குரிய ஆசிரியர்களே!
வணக்கம்,
CORONA என்னும் கொடூர வைரஸ் வேகமாகப் பரவும் காரணத்தினால் நோர்வே அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு கட்டளையிட்டு ஒருசில பாடசாலைகள் மூடப்பட்டது மேலும் ஒருசில பாடசாலைகளை மூடுவதைப்பற்றி ஆலோசிப்பதை அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.
பல கிராமங்கள், பலர் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள், வைரஸ் தொற்றினை முன்தடுக்கவும் எம்மால் முடிந்தவரை கட்டுப்படுத்தவும் , தனிநபர்களாக பொறுப்புடன் நடந்து வைத்திய ஆலோசனைகளை பின்பற்றுவோம்.
 
இன்னிலை எமது சமுதாயத்திற்கு வருவதை நாம் தடுக்கும் நோக்குடன் முன் எச்சரிக்கையாக எமது பாடசாலையை இவ்வாரம் சனிக்கிழமை 14.03.2020 அன்று தற்காலிகமாக நிறுத்துவதாக (விடுமுறை விடுவதாக) முடிவெடுத்துள்ளோம். அடுத்தவாரம் பற்றிய தகவலை எமது வாராந்தத்தகவல் கிழமை 12-2020 இன் மூலம் அறியலாம்.
 
இவ்விடையத்தை லோறன்ஸ்கூக் மாநகராட்சி சுகாதார அமைச்சுடன் தொடர்புகொண்டு அவர்களின் ஆலோசனை பெற்றே எம்மால் இம்முடிவெடுக்கப்பட்டது.இத்திடீர்முடிவினை நாம் எடுக்கவேண்டிய கட்டாயத்தினை அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றோம்.
இது பற்றி எம்முடன் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வளாக நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு சிறிய சுகயீனம் வந்தால் கூட வீட்டில் வைத்து  நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள்.
எம்மையும் எம்மைச்சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்போம்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” CORONA வைரஸ் வரமுன் காப்போம்.
 
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537
நன்றி.

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo