Home

You are here

வாரம் 12-2020.

பெற்றோருக்கான வாராந்தத்தகவல் கிழமை 12-2020
 
வணக்கம்,
 
கொறோனா(Corona) என்னும் கொடூர வைரஸ் வேகமாகப் பரவும் காரணத்தினால் நோர்வேயிலும் உலகில் பெரும்பாலானா நாடுகளிலும் அனைத்து மழலையர் பூங்கா, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மண்டபங்கள், சில வேலைத்தளங்கள் இன்னும் பல மூடப்பட்டது மட்டுமல்ல பல ஒன்றுகூடல்கள், நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஆகியனவும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றது என்பதனை அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.

இதனைக் கருத்திற்கொண்டு நோர்வேஜிய அரசினாலும் சுகாதார அமைச்சினாலும் மறு அறிவித்தல் வரும்வரை அன்னைபூபதி தமிழ்க்கலைக்கூடம் லோறன்ஸ்கூக் (தமிழப்பாடசாலை) நடைபெறமாட்டாது என்பதனை அறிவிக்கின்றோம், 

இதனால் எமது மாணவச்செல்வங்களின் தாய்மொழிக்கல்வி எந்தவிதத்திலும் பாதிப்படையவிடாமல் தடுக்கவேண்டிய கட்டாயத்துக்குள் நாம் இன்று உள்ளோம். அது மட்டுமல்ல எமது வளாக மாணவர்களுக்கு நாம் பரீட்சைகளிலும்தேர்ச்சிபெறக்கூடியவகையிலும் உதவிபுரியவேண்டும்.

இவற்றைக்கருத்தில் கொண்டு நாம் எமது மாணவர்களுடனான கல்வி இரீதியான தொடர்பிற்காக ஒரு சிறுமுயற்சியை எமது வளாக ஆசிரியர்களுடன் சேர்ந்து எடுத்துள்ளோம்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.12-2020.

 
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
 

நன்றி.

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo