Home

You are here

வாரம் 13-2020.

வணக்கம்,
தவக்கால விடுமுறைவரை இணையவழித் தமிழ் - Fram til påskehøytiden Online tamil.
பெரியவெள்ளி, உயிர்த்தஞாயிறு தவக்கால விடுமுறைவரையும் அல்லது அதற்குப்பின் நோர்வேப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் வரை தாய்மொழியை இணைய வழிக்கல்வி மூலம் கற்றுப்பயனடையலாம் என அன்னை பூபதியின் சகல மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறியத்தருகின்றோம்.

கொரோனா கிருமியின் தாக்கம் எமது நாளாந்த வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும், நாம் உற்சாகமாக எமது அடுத்த தலைமுறையினரின் கற்கைச் செயற்பாடுகளை இணையவழி மூலம் முன்னெடுக்கவுள்ளோம்.

அதன் நீட்சியாக ஒரு மென்பொருளை/செயலியை (TEAMS) பயன்படுத்தவுள்ளோம். அதனை நடைமுறைப்படுத்துவதன் முதற்கட்டமாக, அன்னையின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான சில செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மிக விரைவில் மாணவர்களையும் இதில் இணைத்துக் கொள்ளவுள்ளோம்.
 
எமது மாணவர்களுடனான கல்வி ரீதியான தொடர்பினை கடந்தவாரம் போன்று இவ்வாரமும் எமது வளாக ஆசிரியர்கள் ஏற்படுத்துவார்கள். எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் உங்கள் பிள்ளைகளை ஆசிரியர்களால் அந்தந்த வகுப்புக்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் தயார்நிலையில் வைத்திருங்கள்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.13-2020.

 
எமது இணையத்தளப் பக்கம்
http://www.poopathi.no/web_lorenskog/
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 

நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo