Home

You are here

வாரம் 17-2020

வணக்கம்,
பெற்றோர்கூட்டம் 02.05.2020 நேரம் 12:30 இற்கு Teams என்ற இணையவழியில் நடைபெறும். மேலதிக விபரமும் கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலும் அடுத்த வாராந்தத்தகவிலினூடாக அறியத்தரப்படும். தயவுசெய்து அனைவரும் அந்நாள் நேரத்தை ஒதுக்கவும்.
 
இவ்வாரம் சனிக்கிழமை 25.04.2020 இலிருந்து அந்தந்த வகுப்பு  ஆசிரியர்களால் வழங்கப்பட்ட நேரத்தினடிப்படையில் Teams இனூடாகக் கல்விகற்பித்தல் ஆரம்பமாகின்றது.
தெரிவிக்கப்பட்ட முறையில் பதிவினைக் கையாண்ட அனைத்து மாணவர்களும் இணைக்கப்படுவார்கள்.
முக்கிய கவனம்!
 

  • அன்னை தலைமையினால் அனுப்பப்பட்ட தகவலான Teams இல் பதிவுசெய்தல்.

 

  • வைபர் குழுமங்களில்  அனுப்பப்பட்ட Google skjema நிரப்பி அனுப்புதல்.

 
மேற்குறிப்பிட்ட இரண்டு விடையங்களில் ஒன்றேனும் தங்களுக்குக் கிடைக்காதபட்சத்தில் அல்லது பதிவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் உடனே எம்மோடு தொடர்புகொள்ளவும். பிழையாகப் பதிவு செய்யப்பட்டவர்கள் மீண்டும் ஒருமுறை பதிவினை மேற்கொள்ளவும்.
 
உதாரணம்: இரண்டு அல்லது இரண்டிற்குமேல் உள்ள பிள்ளைகளுக்கு ஒரே மின்னஞ்சலைப் பதிவிட்டிருந்தால் மீண்டும் அப்பதிவினை ஒரு பிள்ளைக்கு மாத்திரம் மேற்கொண்டபின்பு எமக்கு அறியத்தரவும்.
 
மழலையர் முற்றம் 2020 சிறுவர்கள் Teams என்ற இணையவழியினூடாகப் பாடல்களைப் பாடிமகிழும் ஒரு சுவாரசியமான நிகழ்வு.
கடந்த வாரம் ஞாயிறு 19.04.2020 அன்று அன்னை பூபதி அம்மாவின் நினைவு நாளை நினைவூட்டும் வகையில் மழலையர் முற்றம் நிகழ்வு மிகச்சிறப்பாக நடந்தேறியுள்ளது. வேறு வளாகங்களைச்சேர்ந்த பல மாணவர்கள் அதிலே பங்குகொண்டுள்ளார்கள்.
 
அந்த வகையில் எதிர்வரும் ஞாயிறு 26ம் திகதி மதியம் 13.00 -14.30 வரை இந்நிகழ்ச்சியானது நடைபெறும்.  இதற்கான விண்ணப்பப்படிவத்தினை அந்தந்த வகுப்புக்களுக்குரிய வைபர் குழுமங்களில் போடப்பட்டுள்ளாது.
 
மேற்படி நிகழ்வை நடைமுறைப்படுத்த பெற்றோரின் ஒத்துழைப்பையும் மாணவர்களின் நிறைவான பங்களிப்பையும் வேண்டி நிற்கிறோம்.
இதுபற்றிய மேலதிகவிபரம் தேவைப்படின் வகுப்பாசிரியர்களுடன் அல்லது எம்மோடு தொடர்புகொள்ளவும்.
நடைபெற்ற இந்நிகழ்வின் காணொளியையும் பதிவுப்படிவத்தையும் இத்தோடு இணைக்கின்றோம்.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.17-2020.
  2. மழலையர் முற்றம் நிகழ்வின் காணொளி 19.04.2020
  3. மழலையர் முற்றத்திற்கான பதிவுப்படிவம்.
  4. Teams பதிவுப்படிவம்.

 
2. அன்னை பூபதி அம்மாவின் நினைவு தினத்தில் இடம்பெற்ற  «மழலையர் முற்றம்» இணைய வழி (Teams) மூலம் முதற் தடவையாக நடைபெற்ற காணணொளி.
 
https://youtu.be/c-TpIME50e0
 
https://youtu.be/96v2v2sq0SQ
 
3.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSea8lvg8mHjnDlmFWB_XgPWnjMeAHYzx2mGnhUyg8rszSClLQ/viewform
 
4.
For å ta i bruk teams i Annai ber vi dere å fylle ut skjemaet på https://abannai.no/elev/
 
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
 

நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo