Home

You are here

வாரம் 18-2020

வணக்கம்,
Teams என்ற இணையவழியில் நடைபெறுவதாக இருந்த பெற்றோர்கூட்டம்  தொழில்நுட்பக்காரணத்தினாலும் அனைத்துப் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை முழுமையாக இதுவரை இணைக்காததன் காரணத்தினலும் 02.05.2020 நடைபெற விருந்த பெற்றோர்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.
 
கடந்தவாரம் போன்று இவ்வாரமும் சனிக்கிழமை அந்தந்த வகுப்பு  ஆசிரியர்களால் வழங்கப்பட்ட நேரத்தினடிப்படையில் Teams இனூடாகக் கல்விகற்பித்தல் நடைபெறும்.
தெரிவிக்கப்பட்ட முறையில் பதிவினைக் கையாண்ட அனைத்து மாணவர்களும் இணைக்கப்படுவார்கள். தேவை ஏற்படின் விரைவில் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
 
இவ்வருடம் 1ஆம் ஆண்டிலிருந்து 9ஆம் ஆண்டுவரையான மாணவர்களுக்கு ஆண்டிறுதித்தேர்வை தேர்வாக நடாத்தாமல் TEAMS இணையவழியில் மதிப்பீடாக நடாத்தத் தீர்மானம்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வாகவே நடைபெறும். எவ்வாறு நடைபெறும் என்ற விபரங்கள் பின்பு அம்மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
 
மழலையர் முற்றம் சிறுவர்களுக்கான இணையவழிப் பாடல் நிகழ்வு 19.04.2020 மற்றும் 26.04.2020 ஆம் திகதியும் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
 
இவ்வருடம் விளையாட்டுப்போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் இனிவரும் காலங்களில் அதனை நடாத்துவதற்கு TBUK வில் தொடர்ந்து செயலில் உள்ள அங்கத்தவர்களாக (Aktiv medlemmer) இவ்வருடமும் எமது பிள்ளைகளையும் பதிவுசெய்து அங்கத்துவத்தினை உறுதிசெய்தல் மிக அவசியம் என TBUK வினர் தெரிவித்திருக்கின்றனர்.
 
இவ்வருடத்திற்கான இறுதித் தவணைக்கட்டணம் 550 குரோணர்கள் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.18-2020.
  2. மழலையர் முற்றம் நிகழ்வின் காணொளி 26.04.2020
  3. TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம்.

 
2. அன்னை பூபதி அம்மாவின் நினைவு தினத்தில் 19.04.2020 ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் 26.04.2020 இடம்பெற்ற  «மழலையர் முற்றம்» இணைய வழி (Teams) மூலம் முதற் தடவையாக நடைபெற்ற சிறுவர்களின் நிகழ்வின் காணொளி.
19.04.2020
https://youtu.be/c-TpIME50e0
 
https://youtu.be/96v2v2sq0SQ
26.04.2020
https://www.youtube.com/watch?v=0ypQIkGxS0o
 https://www.youtube.com/watch?v=bMy4Hw8BJUU
 https://www.youtube.com/watch?v=tR8SGTCHh8c
 
 
3. TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம்.
 
https://medlemskap.nif.no/
 
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
 

நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo