Home

You are here

வாரம் 19-2020

வணக்கம்,
மாணவர்களுக்கான கல்வி கற்பித்தல் வழமைபோல் Teams இணையத்தளத்தினூடாக நடைபெறும்.
 
தெரிவிக்கப்பட்ட முறையில் பதிவினைக் கையாண்ட அனைத்து மாணவர்களும் இணைக்கப்படுவார்கள். தேவை ஏற்படின் விரைவில் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
 
‘’திருக்குறள் ஒப்பித்தல்’’ இணையவழி நிகழ்வு 4,5,6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
காலம்/நேரம்
·         23.05.2020  15:00 மணிக்கும்
·         24.05.2020  12:00 மணிக்கும் நடைபெறும்.  
 
நிகழ்ச்சித்தொகுப்பாளர்களின் தகவல்!
திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விரைவில் அனுப்பப்படும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு வேண்டிக்கொள்கிறோம். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் «எம்மால் முன்பே அனுப்பப்பட்ட திருக்குறள்கள் அனைத்தையும் மனனம் 
செய்து ஒப்பிவிக்கக் கூடிய நிலையில் உள்ள மாணவர்கள் மட்டுமே 
இந்நிகழ்வில் கலந்து கொள்ள தகைமையுடையவர்களாகக் கருதப்படுவர்.
ஒப்புதல் தரும் மாணவர்களின் திருக்குறள் நிகழ்வை இணையத்தில் 
தரவேற்றம் செய்யவுள்ளதால் மேற்படி மாணவரின் ஒப்பிவித்தன் தரம் கவனத்திற் கொள்ள வேண்டிய நிலையில் நாம் உள்ளதையும் சுட்டிக்காட்ட 
விரும்புகிறோம்.
 
 
ஆண்டிறுதித்தேர்வு பற்றிய விபரம் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.
 
வகுப்பறைச்சந்திப்புக்கள் இணையவழியினூடாக நடைபெறவுள்ளது. இதுபற்றி அந்தந்த வகுப்பாசிரியர்கள் தங்களைத்தொடர்புகொள்வார்கள்.
 
இவ்வருடம் விளையாட்டுப்போட்டி நடைபெறாமல்விட்டாலும் இனிவரும் காலங்களில் அதனை நடாத்துவதற்கு TBUK வில் தொடர்ந்து செயலில் உள்ள அங்கத்தவர்களாக (Aktiv medlemmer) இவ்வருடமும் எமது பிள்ளைகளையும் பதிவுசெய்து அங்கத்துவத்தினை உறுதிசெய்தல் மிக அவசியம் என TBUK வினர் தெரிவித்திருக்கின்றனர். அதற்கான கட்டணம் 100குரோணர்கள்.
 
கட்டணம் சம்மந்தமான குறுந்தகவல்(SMS) ஒன்று தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை முடிவுத்திகதிக்கு முன் கட்டுவதனால் தேவையில்லாத மேலதிக கட்டணங்களைத் தவிர்த்துக்கொள்ளாலாம்.
 
இணைப்பைப் பார்க்கவும்:
1.     பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை இல.19-2020.
2.     திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்விற்குப் பதிவுசெய்யும் படிவம்
3.     TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம்.
 
2. திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வில் கலந்து கொள்ள கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி படிவத்தை பூர்த்தி செய்து 19.05. 2020 ற்கு முன்பாக  அனுப்புமாறு வேண்டுகிறோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc5IzFi3rj_b0j52Um1NV5fzMbIZszhlYY6dvZQBc9MGDtWGA/viewform  
 
3. TBUK வில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்யும் படிவம்.
 
https://medlemskap.nif.no/
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
 
நன்றி.

இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo