அனைவருக்கும் வணக்கம்,
கோடைகால விடுமுறை நிறைவடைந்து அனைத்து நோர்வேஜிய பாடசாலைகளும் தற்போதைய சூழ்நிலைகளுக்கமைய பல விதிமுறைகளுடன் சிறப்பாக ஆரம்பமாகி உள்ளன. நாமும் எமது அன்னைத் தமிழ்ப்பாடசாலையை சிறந்த முறையில் பல விதிமுறைகளுடன் நடாத்துவதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் மிக அவசியமானது. திட்டப்படி அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் ஆரம்ப நாள் 22.08.2020 சனிக்கிழமை. ஆனால் நாம் இக்கல்வியாண்டினை (2020-2021) எங்கே? எவ்வாறு? எவ்விதிமுறைகளுடன்? நடாத்துவது என்ற விபரத்தினை 20.08.2020 வியாழக்கிழமை வாராந்தத் தகவல் மூலம் வழங்குவோம்.
முக்கிய குறிப்பு:
தங்கள் பிள்ளைகளுக்கான புதிய புத்தகங்கள் பயிற்சிப்புத்தகங்களுக்கான விலைப்பட்டியலை இத்துடன் இணைக்கின்றோம். அனைவரும் தங்கள் பிள்ளைகளின் பெயர் மற்றும் வகுப்பு விபரங்களுடன் VIPPS செய்தால் வகுப்பறையில் வைத்து ஆசிரியர் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாக வழங்கப்படும். பதிவு செய்த பிள்ளைகளுக்கு மட்டுமே புத்தகங்கள் வழங்கப்படும். தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டே நாம் செயற்படவேண்டும்.
Vipps இல. 100740
புரிந்துணர்வுக்கு நன்றி.
அனைவரும் சுத்தமாகவும் சுகமாகவும் வாழ்வோம்.
"நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்"
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்
தொலைபேசி இலக்கம்: 91375537