வணக்கம்,
தேசிய மட்டத்திலான ”அன்னைத் தமிழ்முற்றப் போட்டி 2021”
புதிய ஆண்டின் ஆரம்பத்தோடு சில நிகழ்வுகளும்,போட்டிகளும் குறிப்பாகத்
தமிழர்திருநாள் சிறப்பு நிகழ்வும் அமையவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் என்பன தொடர்பான விபரங்கள் வருமாறு:
இணையத்தில் இடம் பெறும் நிகழ்வுகளை குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் செய்யமுடியாதவிடத்து,
பிறிதொரு தினத்தில் அந்நிகழ்வு இடம்பெற ஆவன செய்யப்படும்.
தை 9 ம் திகதியும் அதன் பின்னரும் இடம் பெறும் நிகழ்வு:
· பிறக்கவுள்ள புத்தாண்டின் முதல் நிகழ்வாக மழலையர் மற்றும் பாலர் பாடல் இடம்பெறும்.
· பாடல்கள் தமிழர் பண்பாடு, தமிழ்மொழி சார்ந்த பாடல்களாக இருப்பது விரும்பத்தக்கது.
· 2014ல் பிறந்த (1ம் ஆண்டு) மாணவர்களுக்கு ஆத்திசூடி வழங்கப்பட்டுள்ளது. பொருள் விளக்கம் தேவையற்றது.
· 2013ல் பிறந்த (2ம் ஆண்டு) மாணவர்களுக்கு கொன்றைவேந்தன் வழங்கப்பட்டுள்ளது. பொருள் விளக்கம் தேவையற்றது.
· 2012ல் பிறந்த (3ம் ஆண்டு) மற்றும் 2011ல் பிறந்த (4ம் ஆண்டு) மாணவர்களுக்கு நல்வழி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு
வழங்கப்படும் இரண்டு நல்வழிகளில் ஒன்றைத் தெரிவுசெய்தல் போதுமானது.
· மேற்படி1,2,3,4 வகுப்புகளுக்கு வழங்கப்படும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி போன்றன தழிழ்மொழியின் தொன்மையும் நீதி இலக்கணமும் போற்றிப் பேணப்பட வேண்டிய அவசியமுள்ளதால் புலம்பெயர் இளையவர்களின் மொழித்திறனைக் கருத்திற்கொண்டு சுருக்கி வழங்குகிறோம்.
. மேலே கூறப்பட்ட நிகழ்வுகள் இடம்பெறும் காலத்தை அட்டவணையில் பார்வையிலாம், (நிகழ்வுகளின் அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது).
தமிழர்திருநாள் சிறப்பு நிகழ்வு:
. 2021ல் பொங்கல் நிகழ்வுகள் இணையமுற்றத்தில் இடம்பெறவுள்ளதால், தலைப்புகளை மாணவர்களுக்கு வகுப்புரீதியாக வழங்கியுள்ளோம்.
மாணவர்கள் குழுக்களாகவோ தனியாகவோ தமது திறமைகளை வெளிக்கொணரக் கூடியவகையில் வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந் நிகழ்வில் மாணவர்களை பங்குபெற ஊக்குவிக்குமாறு வேண்டுகிறோம்.
நிகழ்வுகள் இணையமுற்றத்தில் இடம்பெறும் நேர அட்டவணை பின்னர் அறியத்தரப்படும்.
பிற்குறிப்பு:
* 2021ல் 1 – 7 ம் ஆண்டு வரையான மாணவர்கள் பேச்சுப்போட்டியில் பங்குபற்றிச் சிறப்பிக்கலாம்.
* திருக்குறள் மாணவர்கள் கற்கும் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இவை விரைவாக அனுப்பிவைக்கப்படும்.
* வேறு சில போட்டிகளின் திட்டமிடல் நிறைவுபெற்றதும் அறியத்தருகிறோம்.
* நிகழ்வு / போட்டிகான விண்ணப்பப் படிவம் விரைவில் கிடைக்க ஆவன செய்யப்படும்.
போட்டிக்கான பேச்சுக்கள், ஆத்திசூடி,கொன்றைவேந்தன், நல்வழி என்பனவற்றை பின்வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்யலாம்…..
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/1_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/2_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/3_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/4_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/5_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/6_klass2021.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/7_klass2021.pdf
Athikuddi (1 klasse)
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/nikalvu/athisudee_2021.pdf
Konnraiventhan (2 klasse)
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/nikalvu/kontaiventhan_1.pdf
Nalvalli year 3
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/nikalvu/nalvalli_year3.pdf
Nalvalli year 4
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2021/nikalvu/nalvalli_year4.pdf
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்