வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
அன்னை தமிழ்முற்றக்குழுவினரின் மடல்!
அனைவருக்கும் வணக்கம்!
அன்புடையீர்,
கடந்த 09 ம் 10ம் திகதி ஜனவரி சனி ஞாயிறு தினங்களிலும் 16ம் 17ம் திகதி சனி ஞாயிறு தினங்களிலும் நடைபெற்று முடிந்த அன்னைத் தமிழ்முற்ற நிகழ்வுகளில் அண்ணளவாக 450 மாணவர்கள் பங்குபற்றிச் சிறப்பித்தது எமக்கு நிறைவைத் தருகிறது.
மேற்படி நிகழ்வுகளில் பெருமெடுப்பிலான மாணவர்களின் பங்களிப்பானது ஆசிரியர்கள், வளாகங்கள், பெற்றோர் அனைவரினதும் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த பரிசாகும். எம் இளையோரின் தனியாளுமையையும் தமிழாளுமையையும் வெளிப்படுத்திய அற்புதமான வாய்ப்பாகவும் இந்நிகழ்வுகள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திட்டமிடல்கள் சிறப்பாக இருந்தாலும் அதைத் திறம்பட நிகழ்த்திச் செல்ல ஆவலோடும் தன்னார்வத்தோடும் இணைந்து தமிழ்ப் பணியாற்றிய வளாக ஆசிரியர்கள், நிர்வாகிகள், செயற்பாட்டாளர்கள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
நோர்வேப் பிரதமர் தைத்திருநாளில் ஆற்றிய சிறப்புரை உங்கள் அனைவரினதும் அளவிடமுடியாத பணிக்குக் கிடைத்த கெளரவமும் அங்கீகாரமும் என்பதில் ஐயமில்லை. எனவே அனைவரின் இணைந்த தமிழ்ப்பணியும் கலை பண்பாட்டுப் பணியும் மேலும் சிறக்க வாழ்த்துவதோடு, எமது இணைந்த செயற்பாடு இணையத்தில் தொடரும் என உறுதியாக நம்புகிறோம்.
இவ்வண்ணம்,
அன்னைத் தமிழ்முற்றப் பணிக்குழு 2021
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்