வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
பெற்றோருக்கான முக்கிய தகவல்!
திட்டமிட்டபடி இடம்பெறவுள்ள திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 6ம் திகதி சனி பிற்பகல் 15:00 மணிக்கும் 7ம் திகதி ஞாயிறு முற்பகல் 11.00 மணிக்கும் ஆரம்பிக்கும். சனிக்கிழமை நான்கு பிரிவுகளாகவும் ஞாயிற்றுக்கிழமை மூன்று பிரிவுகளாகவும் இந் நிகழ்வுகள் இடம்பெறும் என்பது அறிந்ததே.
ஞாயிறு விண்ணப்பப் படிவத்தில் தவறுதல் இடம்பெற்றுள்ளது. முற்பகல் 11.00, 11.15, 11.30 என்பதற்குப் பதிலாக பிற்பகல் 15:00, 15:15, 15:30 ஆகிய நேரங்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளது, இதனால் பெற்றோர்கள் பிற்பகலில் திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வுகள் இடம்பெறும் எனக் காத்திருக்கக் கூடும். எனவே இத் தவறை நிவர்த்தி செய்யும் முகமாக இரண்டு வழிகளைக் கையாளலாம் என எண்ணுகிறோம்.
1. ஞாயிறு நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காக பதிவு செய்த மாணவர்கள் அனைவரும் பின்வருமாறு மணி 15:00, 15:15, 15:30 இற்குப் பதிலாக மணி 11:00, 11:15, 11:30 என்ற நேரத்தில் இணையத்தில் இணைந்து கொள்ளலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
கலந்துகொள்ளக்கூடிய மாணவர்களை நாம் இணைத்து நிகழ்வை நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்.
2. ஞாயிறு முற்பகல் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு பிறிதொரு சந்தர்ப்பத்தை விரைவில் ஏற்படுத்தித் தரலாம் என்பதையும் தெரிவிக்கிறோம்.
இரண்டாவதைத் தெரிவுசெய்தவர்கள் வளாகப்பொறுப்பாளரிடம் விரைவில் தெரிவிக்கவும்.
புரிதலுக்கு நன்றி.
அன்னை தமிழ் முற்றப் பணிக்குழு 2021
எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் - 14ம் திகதி சனி ஞாயிறு மற்றும்
20ம்-21ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் பாலர் வகுப்பு முதல் ஆண்டு 7 வரை உள்ள மாணவர்கள் பங்குபெறவுள்ள சிறுகதை சொல்லுதல், பேச்சு நிகழ்வுகளுக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்ய கிழேயுள்ள
இணைப்பை அழுத்தவும். மேலும் படிவத்தில் மாணவர் இலக்கத்தைக்
குறிப்பிட்டுவது அவசியம் என்பதைக் கருத்திற் கொள்ளவும். விண்ணப்பமுடிவு 06.03.2021 என்பதையும் நினைவிற் கொள்ளவும்.
https://forms.gle/HXdR7c6fofHdwz4E9
https://www.lorenskog.kommune.no/koronavirus/lokale-koronatiltak-i-lorenskog/
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்