வணக்கம்,
இன்று மாலை 5 மணிக்கும் 5.30 மணிக்கும் இடையில் மழலையர் மற்றும் சிறுவர் ஒளிவடிவப் பாடலுக்கான படப்பிடிப்பு ஓசன் பாடசாலையில் இடம்பெறும். இதில் பங்குகொள்ளவிரும்பும் பிள்ளைகளை கொறோணா விதிமுறைகளுக்கமைய முன்பதிவு செய்தல் வேண்டும். எனவே தயவுசெய்து வரவிரும்பும் பிள்ளைகளின் பதிவை மாலை 4 மணிக்கு முன்னதாக 99390224 என்ற இலக்கத்தினூடாக மேற்கொள்ளவும். இப்பாடல் அன்னை பூபதித் தமிழ்க் கலைக்கூத்தின் தயாரிப்பு எனக் குறிப்பிடுகின்றோம். குறுகிய நேர அவகாசம் வழங்குவதை எண்ணி வருந்துகின்றோம். புரிதலுக்கு நன்றி.
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537 .
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்