வணக்கம்,
கடந்த கல்வியாண்டு பல அறைகூவலுக்கு(சவால்கள்) மத்தியில் நாம் தமிழ்ப்பாடசாலையை சிறப்பாக வழிநடாத்த ஒத்துழைப்புத்தந்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், தேனீர்ச்சாலைக்குழுவினர், வகுப்புப்பிரதிநிதிகள், பெற்றோர்குழுவினர், நிர்வாகத்தெரிவுக்குழுவினர், கணக்காய்வாளர், வளாக நலன்விரும்பிகள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து நிற்கின்றோம்.
கொரோனா காலங்களிலும் வீட்டிலிருந்த மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரையும் மனம் சோர்வடையாமல் எந்த நிலையிலும் தமிழை வளர்க்க நாம் உள்ளோம் என்று எடுத்துக்காட்டாக தங்கள் பணிகளை சிறப்பாக செய்த அன்னை தமிழ்முற்றக் குழுவினருக்கும் அன்னை தலைமை நிர்வாகத்தினருக்கும் எமது வளாகம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
தொடர்ந்தும் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கின்றோம்.
அடுத்த கல்வியாண்டு பல புதிய திட்டங்களுடன் பாடசாலை நடைபெறும்.
அடுத்த கல்வியாண்டு தொடக்கத்தில் சில விளையாட்டு நிகழ்வுகளைச் செய்யும் திட்டத்திற்கான அறிவுரைச் சந்திப்புக்களை தமிழ் இளையோர் சிறுவர் விளையாட்டுக்கழகத்தினர் (TBUK) ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். மேலதிக விபரங்கள் பின்பு அறிவிக்கப்படும்.
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்