Home

You are here

வாரம் 45 - 2021

வணக்கம்,
 
இணைப்பைப் பார்க்கவும்:

  1. பெற்றோருக்கான வாராந்தத்தகவல்: கிழமை எண். 45-2021.

 
உள்ளடக்கம்

  • அன்னை உறுப்பினர் தகவல் சந்திப்பு 21.11.2021 நேரம் 17.00
  • கல்வி
  • தமிழ் மொழித் தேர்வுக்கான தயார்படுத்தல் வகுப்பு 2021
  • மாவீர ர் நினைவாக நடாத்தப்படும் ஓவியப்போட்டி 2021
  • சிற்றுந்துதாரர்களின் கவனத்திற்கு
  • கலைவகுப்புகள் – நத்தார் விழா 2021 – நாள் திட்டமிடல்
  • நிதி - விளக்கம்
  • சந்திப்புக்கான நிகழ்ச்சிநிரல்.

 
மாவீரர் நினைவாக நடத்தப்படும் ஓவியப்போட்டி 2021
 
• ஓவியப்போட்டி நடைபெறும் நேரம் 60 மணித்துளிகள் (1மணிநேரம்)

• பாடசாலை நடைபெறும்போது வகுப்புநேரத்தில் நடைபெறும்.

• ஓவியத்தாள் தவிர்ந்த தேவையான உபகரணங்களை மாணவர்கள் கொண்டுவருதல் வேண்டும்.

• வரையப்போகும் ஓவியத்தை வீட்டில் பயிற்சிசெய்யலாம்.

• பயிற்சிசெய்த ஓவியத்தாள்கள் போட்டி நடைபெறும் இடத்திற்கு எடுத்துவர அனுமதியில்லை.

• ஓவியத்தாளை முழுமையாகப் பயன்படுத்துதல் வேண்டும். (வரைந்து நிறம் தீட்டியிருத்தல் வேண்டும்.

• போட்டிகள் நான்கு பிரிவுகளாக நடைபெறும்.

• ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தலைப்புகளில் ஒன்றை மட்டுமே போட்டியாளர்கள் தெரிவுசெய்து, வரைந்து, நிறம் தீட்டுதல் வேண்டும்.

• போட்டியாளர்களுக்கான சுட்டிலக்கங்கள் அன்று எம்மால் வழங்கப்படும்.

•  இம்மாதம் 20ஆம் திகதியன்று ஓவியத்தாள்களை அன்னையிடம் வழங்கவேண்டியுள்ளதால் இப்போட்டியினை 20.11.2021 நேரம் 09:45-10:45 நடாத்தப்படும்.
 
ஓவியப்போட்டிக்கான பிரிவுகளும் அதற்குரிய தலைப்புகளும்
 
பிரிவு 1 (5ம், 6ம் வகுப்பு)

  1. தமிழீழ தேசிய சின்னங்களில் ஒன்று  -  அல்லது
  2. நடுகல் வழிபாடு

 
பிரிவு 2 (7ம், 8ம் வகுப்பு)

  1. மாவீரர் துயிலுமில்லம்     - அல்லது
  2. தமிழீழ வரைபடம். (தமிழரின் பூர்விக பிரதேசங்களின் பெயர்களுடன்)

 
பிரிவு 3 (9ம், 10ம் வகுப்பு)

  1. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபன் திலீபனின் நினைவுத்தூபி – அல்லது
  2. ஈழத்தமிழர் நில அபகரிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்.

 
பிரிவு 4 (11ம், 12ம் வகுப்பு)

  1. முள்ளிவாய்க்கால் பேரவலம்   - அல்லது
  2. தமிழீழ நிழல் அரசும் உட்கட்டுமானங்களும்

 
மாணவர்களை/பிள்ளைகளை ஊக்கம்செய்து இப்போட்டிக்குத் தயார்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

உதவி அல்லது மேலதிக விபரம் தேவைப்படின் எம்மைத் தொடர்புகொள்ளவும்.

"தமிழ் எங்கள் அடையாளம்"
 
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.

நன்றி.
 
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo