வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
உள்ளடக்கம்
2022 ம் ஆண்டு மார்ச் மாதம் 26 - 27 சனி, ஞாயிறு தினங்களில் அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள்
அன்புடையீர்,
எதிர்வரும் புதிய வருடம் மார்ச் மாதம் 26 - 27 சனி, ஞாயிறு தினங்களில் அன்னைத் தமிழ்முற்றப் போட்டிகள் றொம்மனில் அமைந்துள்ள தமிழர் வள ஆலோசனை மையக் கட்டடத் தொகுதியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.
சிறுவர் கதை சொல்லும் போட்டி - 2016 ஆண்டு பிறந்த மாணவர்களுக்கு உரியது.
2012 முதல் 2006 வரையில் பிறந்த மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி.
2015 முதல் 2009 வரை பிறந்த மாணவர்களுக்கான பேச்சுப்
போட்டிகள் மேற்குறிப்பிட்ட காலத்தில் இடம்பெறும்.
இப்போட்டிகளில் பங்குகொள்ள மாணவர்களை தயார்ப்படுத்தும் நோக்கில் சிறுவர் கதை சொல்லும் போட்டி தவிர்ந்த ஏனைய போட்டிகளுக்கான திருக்குறள்களும், பேச்சுக்களும் இம் மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ளது. (2009,2010 ஆண்டு பிறந்த மாணவர்களுக்கான பேச்சு விரைவில் அனுப்பி வைக்கப்படும்). இப்போட்டிகளில் மாணவர்களை பங்கு பெற ஊக்குவிக்குமாறு ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் அன்போடு வேண்டுகிறோம்.
இறுதிப் போட்டிகள் றொம்மனில் அமைந்துள்ள தமிழர் வள ஆலோசனை மையக் கட்டடத்தில் எதிர்வரும் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 26 ம் திகதி சனி 27 ம் திகதி ஞாயிறு தினங்களில் (26.03.22 + 27.03.22) இடம்பெறும். போட்டிகள் நடாத்தப்படும் நேரம் தொடர்பான துல்லியமான தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான நடைமுறைத் தகவல்கள் போட்டி இடம் பெறும் மண்டபத்தில் அறியத்தரப்படும்.
போட்டிகள் யாவும் பொதுவான விதிமுறைகளின் அடிப்படையில் இடம்பெறும். தேவையேற்படின் போட்டிகளில் விதிமாற்றம் அன்னை தமிழ்முற்ற பணிக் குழுவினரால் மேற்கொள்ளப்படும்.
போட்டிகள் சிறப்பாக இடம்பெற அனைவரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்கி நிற்கின்றார்கள் அன்னை தமிழ்முற்றக் குழுவினர்கள்.
பேச்சு ஆண்டு 1 - 5 வரை
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale01.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale02.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale03.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale04.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/tale/tale05.pdf
திருக்குறள் ஆண்டு 4 - 10 வரை
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kural_4.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kural_5.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kural_6.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kural_7.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kural_8.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kural_9.pdf
https://www.poopathi.no/web/sites/default/files/tale/2022/thirukural/kural_10.pdf
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்