வணக்கம்,
இணைப்பைப் பார்க்கவும்:
1. பெற்றோருக்கான வாராந்த தகவல்: கிழமை எண். 13-2022
உள்ளடக்கம்
· பேச்சு மற்றும் திருக்குறள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.
· உதவிபுரிந்த பெற்றோர்குழுவினருக்கு நன்றி.
· கல்வி – கலைவகுப்புகள் வழங்கப்பட்ட நேரத்தில் நேரடியாக ஓசன் பாடசாலையில் நடைபெறும்.
· நிதி
· சிற்றுண்டிச்சாலை
· விளையாட்டுப்போட்டி 2022
· ஆண்டுக்கூட்டம் 23.04.2022 நடைபெறும்.
· ஆண்டுக்கூட்டத்திற்கான உறுப்பினர்களின் விடையங்கள் 10.04.2022 இற்குமுன்.
· பெற்றோரின் கவனத்திற்கு.
அன்னை தமிழ்முற்ற இறுதிப்போட்டியின் விபரம்
அன்புடையீர்
எதிர்வரும் 02.04.22 சனியன்று 2012 - 2009 வரை பிறந்த மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் திட்டமிட்டபடி இடம் பெறும்.
· பேச்சுப் போட்டிகள் இரண்டு பகுதிகளாக போட்டிகள் இடம்பெறும்.
· பகுதி 1 ஆரம்பிக்கும் நேரம் 15.30
· பகுதி 2 ஆரம்பிக்கும் நேரம் 17. 30
· போட்டிகள் 2ம் மாடியில் உள்ள மண்டம் 2 இலும் 3 ம் மாடியில் அமைந்துள்ள மண்டம் 3 இலும் இடம்பெறும்.
· 2ம் மாடியிலுள்ள மண்டம் 1இல் பரிசளிப்பு இடம்பெறும்.
· போட்டியாளர்கள் போட்டிகள் ஆரம்பமாவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக உரிய மண்டபத்தில் சமூகமளித்தல் வேண்டும்.
· மண்டபத்திலேயே வரவுப் பதிவு செய்யப்பட்டு குலுக்கல் முறையில் போட்டியாளர்கள் வரிசை தெரிவு செய்யப்பட்டு, இலக்கங்கள் வழங்கப்படும்.
· குறிப்பிட்ட போட்டி நிறைவடைந்த பின்பு தாமதமாக வரும் போட்டியாளர் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்.
· தேவையேற்படின் போட்டிகளின் நேரம் மாற்றியமைக்கப்படும்.
· போட்டிகள் நடக்கும் மண்டம் தொடர்பான தகவலை இணைப்பில் பார்வையிடலாம்.
அன்னை தமிழ் முற்றத்தினால் நடாத்தப்படும் பேச்சு மற்றும் திருக்குறள் இறுதிப் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் எமது வளாகத்திலிருந்து அங்குசென்று உதவிபுரிய விரும்புபவர்களும் எமது மாணவர்களை ஊக்கிவிக்க விரும்புபவர்களும் அங்குசென்று கலந்துகொள்ளலாம்.
எமது வளாக நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது எம்மால் வழங்கப்படும் தகவல்களில் தெளிவின்மை அல்லது சந்தேகங்கள் இருப்பின் வளாகப் பொறுப்பாளருடன் நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலம் தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். தொலைபேசி இல. +4791875537.
நன்றி.
இங்ஙனம்
நிர்வாகம்
அன்னை லோறன்ஸ்கூக் வளாகம்