Home

வருடாந்த ஆண்டுக்கூட்டம் 30.10.20

எதிர்வரும் 30.10.20 வெள்ளிக்கிழமை 19.15 தொடக்கம் 20.15 மணிவரை இணையமுற்றத்தில் நடாத்தவிருக்கும் வருடாந்த ஆண்டுக்கூட்டததிறகு உங்கள் பிள்ளைகளின் இணையமுற்றத்தினூடாகவே நீங்கள் கலந்துகொள்ள முடியும், எனவே பெற்றோரில் ஒருவர் மட்டும் கலந்து கொள்வது விரும்பத்தக்கது.

 

கல்வியற் போட்டிகள், 31.10.20

நடைபெறும் காலம் : 31.10.20

நேரம் :        வழமையான வகுப்பு நேரங்களில் நடைபெறும்

ஓவியப் போட்டி

வளர்நிலை 1 இருந்து ஆண்டு 10 வரையானமாணவர்கள் தாம் விரும்பும் ஓவியத்தை வரையலாம்.

உறுப்பெழுத்துப்போட்டி

வளர்நிலை 1 இருந்து ஆண்டு 5  வரையானமாணவர்களுக்கு எம்மால் வழங்கப்படும் சொல்லியத்தையோ அன்றி சொற்றொடரையோ பார்த்து எழுதுதல் வேண்டும்.

கட்டுரைப்போட்டி

6ஆம் ஆண்டிலிருந்து  10 ஆம் ஆண்டு வரையான மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறும்.

வருடாந்த ஆண்டுக்கூட்டம் 30.10.20

கடந்த பங்குனி மாதம் நடைபெறவிருந்த வருடாந்த ஆண்டுக்கூட்டம் covid 19 இடரால் பிற்போடப்பட்டது அனைவரும் அறிந்ததே. தற்போதைய நிலையில் தொடர்ந்தும் வழமைபோல் ஆண்டுக்கூட்டத்தை நடாத்துவது சாத்தியமற்றது, எனவே எதிர்வரும் 30.10.20 வெள்ளிக்கிழமை 19.15 தொடக்கம் 20.15 மணிவரை இணையமுற்றத்தில் நடாத்த தீர்மானித்துள்ளோம். 

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 

 

இலையுதிர்கால விடுமுறை 03.10.20

எதிர்வரும் 03.10.2020 பாடசாலைகளின் இலையுதிர்கால விடுமுறையால் வகுப்புக்கள் நடைபெறமாட்டாது.

அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2020

அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழுவினரால் நடாத்தத் திட்டமிடப்பட்ட இலையுதிர் காலப் போட்டிகள் தொடர்பான விபரங்களை நினைவுபடுத்த விரும்புகிறோம். குறிப்பாக சிறுகதை ஆக்கப் போட்டியின் கால எல்லையை நீடிப்புச் செய்துள்ளோம். 

விபரங்கள் வருமாறு:

குறும்பட ஆக்கம் – போட்டியில் பங்குபற்றுவதற்கான இறுதிநாள் 25.09.2020

அறிவித்தல் 26.09.2020

நாளைய வகுப்புக்கள்(26.09.2020) அனைத்தும் தவிர்க்க முடியாத காரணத்தால் இணையமுற்றத்தில்(Teams) நடைபெறும்.

 

தமிழ் மொழி தேர்வுக்கான தயார்ப்படுத்துதல் வகுப்புக்கள் 2020

உயர் கல்வி வகுப்புத் தேர்வில் (videregående Skole)  தமிழ் மொழியை தேர்வு மொழியாக எடுக்கும் மாணவர்களுக்கான, தமிழர் வள ஆலோசனை மையம் நடாத்தும் தயார்ப்படுத்தல் வகுப்புக்கள். 

அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2020

அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2020

குறும்பட ஆக்கம், சிறுகதை ஆக்கம், சித்திரக்குறும்பட ஆக்கம், சிறுவர்பாடல் மொழிமாற்றம் செய்து பாடுதல்,

மேற்படி 4 போட்டிகளை அன்னை தமிழ் முற்றப் பணிக்குழுவினர் இலையுதிர் காலத்தில் நடாத்தவுள்ளனர். போட்டிகள் சார்ந்த விபரங்களை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

 http://annai-tamilmutram.annai.no

 

புதிய கல்வியாண்டு 2020 - 2021

புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும்: 22.08.2020

 வகுப்புகள் - 09.30 - 12.00

 தகவல்கள்

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில் பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி மொட்டன்ஸ்றூட் வளாகம் பெருமகிழ்வு அடைகின்றது. இருந்தும் இன்றைய கொரோனா நோய்த்தொற்று காரணமாக வழமை போல் நாம் பாடசாலையை நடாத்த முடியாத இக்கட்டான சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது, எனவே இக் காலகட்டத்தில் நாமும் எமது செயற்பாடுகளை அரசசட்ட விதிகளுக்கும்,பாடசாலைச் சட்ட விதிகளுக்கும் அமைய  சுகாதாரப் பாதுகாப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், எனவே அதற்கமைய சில மாற்றங்களும் முன்னேற்பாடுகளும் செய்துள்ளோம்.

 

 

அனைவரும் சேர்ந்து உழைத்திடுவோம்!

 

இடர்காலத்திலும் எம் தாய்மொழிக்கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு அனைவரும் சேர்ந்து உழைத்திடுவோம்!

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில்(2020-2021) புதிய உத்வேகத்துடனும், நம்பிக்கையோடும் புதிய பட்டறிவுகளோடும்; ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவச்செல்வங்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் பெருமகிழ்வு அடைவதோடு, அனைவரையும்; அன்புடன் வரவேற்றுக்கொள்கின்றது. கடந்த கால கற்பித்தல் பட்டறிவுகளோடும்; புதிய பல கற்பித்தல் நுட்பங்களோடும், புதிய கல்வியாண்டில் தமது கற்பித்தல் பணியைச் சிறப்புடன் ஆற்ற  அன்னையின் ஆசிரியர்கள் அணியமாகிவிட்டார்கள்.

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo