Home

அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2020

அன்னை தமிழ்முற்றப் போட்டிகள் 2020

குறும்பட ஆக்கம், சிறுகதை ஆக்கம், சித்திரக்குறும்பட ஆக்கம், சிறுவர்பாடல் மொழிமாற்றம் செய்து பாடுதல்,

மேற்படி 4 போட்டிகளை அன்னை தமிழ் முற்றப் பணிக்குழுவினர் இலையுதிர் காலத்தில் நடாத்தவுள்ளனர். போட்டிகள் சார்ந்த விபரங்களை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். 

 http://annai-tamilmutram.annai.no

 

புதிய கல்வியாண்டு 2020 - 2021

புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும்: 22.08.2020

 வகுப்புகள் - 09.30 - 12.00

 தகவல்கள்

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில் பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி மொட்டன்ஸ்றூட் வளாகம் பெருமகிழ்வு அடைகின்றது. இருந்தும் இன்றைய கொரோனா நோய்த்தொற்று காரணமாக வழமை போல் நாம் பாடசாலையை நடாத்த முடியாத இக்கட்டான சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது, எனவே இக் காலகட்டத்தில் நாமும் எமது செயற்பாடுகளை அரசசட்ட விதிகளுக்கும்,பாடசாலைச் சட்ட விதிகளுக்கும் அமைய  சுகாதாரப் பாதுகாப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், எனவே அதற்கமைய சில மாற்றங்களும் முன்னேற்பாடுகளும் செய்துள்ளோம்.

 

 

அனைவரும் சேர்ந்து உழைத்திடுவோம்!

 

இடர்காலத்திலும் எம் தாய்மொழிக்கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு அனைவரும் சேர்ந்து உழைத்திடுவோம்!

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில்(2020-2021) புதிய உத்வேகத்துடனும், நம்பிக்கையோடும் புதிய பட்டறிவுகளோடும்; ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவச்செல்வங்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் பெருமகிழ்வு அடைவதோடு, அனைவரையும்; அன்புடன் வரவேற்றுக்கொள்கின்றது. கடந்த கால கற்பித்தல் பட்டறிவுகளோடும்; புதிய பல கற்பித்தல் நுட்பங்களோடும், புதிய கல்வியாண்டில் தமது கற்பித்தல் பணியைச் சிறப்புடன் ஆற்ற  அன்னையின் ஆசிரியர்கள் அணியமாகிவிட்டார்கள்.

புதிய கல்வியாண்டு ஆரம்பம் 22.08.2020


துளிர்விடும் பனிமலர்களோடு துள்ளியாடிய விடுமுறையின் நினைவுகளோடு, மொழி இல்லையேல் இனம் இல்லை என்ற மூத்தோர் எண்ணத்திற்கு விழுதாக மொழியறிந்து புகழ்பரப்ப, கல்விக்கூடத்தில் கால்பதிக்கும் மாணவச்செல்வங்களையும், கரம்பிடித்து வாஞ்சையாய் அழைத்துவரும் பெற்றோர்களையும், அள்ளக் குறையா கல்விச்செல்வத்தை அள்ளி அள்ளி வழங்கி, மனம் நிறையும் ஆசிரியர்களையும் மனதார வரவேற்பதில் அன்னை பூபதி மொட்டன்ஸ்றூட் வளாகம் பெருமைகொள்கின்றது…

உங்களை மொட்டன்ஸ்றூட் வளாகம் அன்புடன் வரவேற்கிறது.

உங்களை மொட்டன்ஸ்றூட் வளாகம் அன்புடன் வரவேற்கிறது.

இளஞ்சிறார்கள் எமது தாய்மொழியை அதற்குரிய விழுமியங்களுடன் கற்கும் போதுதான் அவர்களின் மனதில் எமது உயிர்ப்பின் இருப்பாம் இன்பத்தமிழின் உணர்வு ஓர்மத்துடன் வலுப்பெறும்.

ஒருவருக்கு மனதில் தாய் மொழி உணர்வு இருந்தால் தான்தனது இனத்தின் குழுமலுடன் இணைந்து வாழும் காப்பரண் அமையும்.

தாய்மொழியே ஒருவனுக்குப் பிறமொழிகளைக் கற்க வான் போலிருந்து தண்புனல் தந்திடும்.

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo