Home

You are here

அறிவித்தல்

மதிப்பீடு

மாணவர்களுக்கான புலன்மொழி மதிப்பீடு சனிக்கிழமை 23.05.2020 அன்று இணையமுற்றத்தில் நடைபெறும் மதிப்பீட்டுக்கான நேர அட்டவணையை ஆசிரியர்கள் அறியத்தருவார்கள்.

திருக்குறள் ஒப்புவித்தல்

இணைய வழி மூலம் 2007, 2008, 2009, 2010 ம் ஆண்டு பிறந்த மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்வு எதிர்வரும் 23.05.2020 சனிக்கிழமை 15.00 மணிக்கு, அன்னை தமிழ் முற்றப் பணிக்குழுவினரால் நடாத்தப்படவுள்ளது. (மாணவர்களின் பதிவு அதிகமானால் 24.05.2020 அன்று 12.00 மணிக்கும் நடைபெறும்)
எம்மால் வழங்கப்பட்ட திருக்குறள்கள் அனைத்தையும் மனனம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொள்ளமுடியும்.
மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி படிவத்தை பூர்த்தி செய்து 19.05.2020 ற்கு முன்பாக அனுப்பி வைக்கவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc5IzFi3rj_b0j52Um1NV5fzMbIZszhlYY6dvZQBc9MGDtWGA/viewform  
திருக்குறள் பிரதிகள் இணைக்கப்டுள்ளது.

 

 

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அன்னை பூபதியின் நினைவு நாள்

நாட்டுப்பற்றாளர் தினத்தில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதுடன், இடர்களும் இன்னல்களும் எம்மீது திணிக்கப்படும் காலத்தில் நாம் ஒரு தேசிய இனமாக, இந்நிலைகளில் இருந்து மீண்டெழப் பணியாற்ற வேண்டும் என்பதில் எம்முடன் இணைந்து அர்ப்பணிப்புடன் தமிழ்ப் பணி செய்திடும் நிர்வாகிகளே, ஆசிரியர்களே!

 

மழலையர் முற்றம்

மழலையர் முற்றத்தில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று தங்கள் தகவல்களை  பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSea8lvg8mHjnDlmFWB_XgPWnjMeAHYz...

அறிவித்தல்

அனைவருக்கும் வணக்கம்!
இணையவழித் தமிழ்க் கல்வியை 
நடைமுறைப்படுத்தும் வகையில்    அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட 
நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை இணைக்கும் பணிகள் 
நிறைவடைந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக அனைத்து மாணவர்களையும் TEAMS இல் இணைக்கும் நடைமுறையை மேற்கொள்ளவுள்ளோம்.  

 

அன்னை இணைய வழிக்கல்வி

அன்னை பூபதி தமிழ்க்கலைக் கூடத்தினால், இணைய வழிக்கல்வி மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான முயர்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சுமார் 1800 வரையிலான மாணவர்களையும், 300 வரையிலான ஆசிரியர்களையும் 100 வரையிலான நிர்வாகிகளையும், 16 வளாகங்களையும் இணைத்து இச்சேவையை செய்யவேண்டியுள்ளது, இவ் இணையக்கல்வி வெகுவிரைவில் உங்களின் அறிமுகத்துக்கு வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். 
இதற்காக நோர்வேயியப் பாடசாலைகளில் பெரும்பாலும் பாவிக்கப்படும் TEAMS, எனும் மென்பொருள் பாவிக்கப்படவிருக்கின்றது. 
 

அறிவித்தல்

கடந்த சில வாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம், எமது மாணவர்களின் தாய்மொழிக்கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை, எனவே மாணவர்களின் தாய்மொழிக் கற்கைச் செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டு பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வாராந்த சனிக்கிழமைகளில் தமிழ்ப்hடசாலையில் கற்கைச் செயற்பாடுகள் நடைபெறுவது போன்று, மாணவர்கள் வீட்டிலிருந்து கற்பதற்கான ஒழுங்குகளை ஆசிரியர்கள் நடைமுறைப் படுத்தவுள்ளார்கள். எனவே பெற்றோர்களாகிய உங்களின் ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றோம்.

அறிவித்தல்

14.03.2020 - பாடசாலை நடைபெற மாட்டாது.

கடந்த இருவாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையைப் பாதித்துள்ளது. நோர்வேயில் கொரோனா கிருமியால் ஏற்படும் பாதிப்புக்களை உடனுக்குடன் அறிய https://www.fhi.no/sv/smittsomme-sykdommer/corona/ 

இணையத்தளத்தை பார்வையிடவும்.

வருடாந்தப் பொதுக்கூட்டம் 21.03.2020

வருடாந்தப் பொதுக்கூட்டம் 21.03.2020 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டிய விடயங்களை, பெற்றோர்கள் 14.03.2020 க்கு முன் எழுத்து மூலமாக நிருவாகத்திடம் சமர்பிக்கவும்.
 

அன்னை தமிழ் முற்றப்போட்டிகள் 2020

அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள்  சனி 29.02.20, ஞாயிறு 01.03.20 தினங்களில் இடம்பெறும்.மேற்படி போட்டி நிகழ்ச்சிகளை திறம்பட நடாத்தவும், நேர விரயத்தைத் தவிர்க்கவும் வளாகங்கள் கீழ்க்காணும் நடைமுறையை கடைபிடிக்குமாறு அனைவரையும் வேண்டிகிறோம்.

Pages

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo