Home

You are here

அறிவித்தல்

கடந்த சில வாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம், எமது மாணவர்களின் தாய்மொழிக்கல்வியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை, எனவே மாணவர்களின் தாய்மொழிக் கற்கைச் செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டு பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வாராந்த சனிக்கிழமைகளில் தமிழ்ப்hடசாலையில் கற்கைச் செயற்பாடுகள் நடைபெறுவது போன்று, மாணவர்கள் வீட்டிலிருந்து கற்பதற்கான ஒழுங்குகளை ஆசிரியர்கள் நடைமுறைப் படுத்தவுள்ளார்கள். எனவே பெற்றோர்களாகிய உங்களின் ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றோம்.
இத்தகவல் எமது பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளவும், அத்துடன் மேலதிக தகவல்களை அறிய எமது இணையத்தளத்தைப் பார்வையிடவும்.
 

பயிற்சிகள் தேர்வுகள் கதைகள் கட்டுரைகள்

வளாக நிகழ்வுகள்

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo