Home

You are here

அறிவித்தல்

அனைவருக்கும் வணக்கம்!
இணையவழித் தமிழ்க் கல்வியை நடைமுறைப்படுத்தும் வகையில்    அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூட 
நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை இணைக்கும் பணிகள் 
நிறைவடைந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக அனைத்து மாணவர்களையும் TEAMS இல் இணைக்கும் நடைமுறையை மேற்கொள்ளவுள்ளோம்.  
இதற்கான தகவல் திரட்டும் திட்டத்தின் அடிப்படையில் 
பெற்றோர்களுக்கான குறுந்தகவல் (SMS) ஒன்று அனுப்பப்ட்டுள்ளது. அவ் SMS ல் MedlemID-annai/elevID-annai உடன் அன்னை இணையத்தள முகவரியும் இருக்கும். அன்னை இணையத்தள முகவரியை அழுத்தியதும், நீங்கள் இணையவழிக் கல்விக்கான தகவல் சேமிக்கும் படிவத்தை பூர்த்திசெய்ய வேண்டும்.
 
இப் படிவத்தில் மாணவரின் …..
Fornavn (Norsk),
Etternavn (Norsk),
MedlemID-annai/elevID-annai (har fått påSMS) 
பிள்ளைகளின் நோர்வேஜியபாடசாலை TEMAS-ID epostadresse 
வளாகத்தின் பெயர் என்ற விபரங்களைப் பூர்த்திசெய்து இணையவழித் தமிழ்க் கல்வியில் நுழைந்துகொள்ள முடியும். நோர்வேஜிய பாடசாலை TEMAS-ID epostadresse பாவிப்பதனால் ஒரே பயனாளர் (username) பெயர் ஒரேகடவுச்சொல் (paassword) கொண்டு உள்நுழைய முடியும். 
 
நோர்வேஜியபாடசாலையில் TEAMSID இல்லாத மாணவர்கள் படிவத்தை பூர்த்திசெய்யும் போது hotmail,outlook அல்லது gmail மின்னஞ்சல் 
முகவரி மட்டுமே பயன்படுத்தமுடியும். 
அனைத்து TEAMS உள்நுழைவும் Microsoft நிறுவனத்தின் பயனாளர்
தகவலிலே சேமிக்கப்படுவதால் பிள்ளைகளின் நோர்வேஜியபாடசாலை TEMAS-ID epostadresse ,  hotmail, outlook அல்லது gmail 
 
மின்னஞ்சல் முகவரி தவிர்ந்த ஏனைய மின்னஞ்சல் முகவரிகள் ஏற்கப்படமாட்டாது என்பதையும் அறியத்தருகிறோம்.
 
மேற்படி படிவத்தை சரியாகப் பூர்த்திசெய்வதால் அனைத்து மாணவர்களும்  அன்னையின் சரியான வளாகத்தின் இணையவழித் தமிழ்க் கல்வி  வகுப்பறையில்இணைக்கப்படுவார்கள்.  
அனைத்து TEAMS உள்நுழைவும் Microsoft நிறுவனத்தின் பயனாளர்  
தகவலிலே சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தயவுசெய்து குறுந்தகவல் (SMS) கிடைத்ததும், அன்னை இணையத்தளத்தில்  https://abannai.no/elev/

 
உள்ள படிவத்தில் தங்கள் பிள்ளைகளின் 
விபரங்களை உடனே நிரப்பி அனுப்புமாறு வேண்டப்படுகின்றீர்கள்.  
 
 
 
 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo