Home

You are here

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் அன்னை பூபதியின் நினைவு நாள்

நாட்டுப்பற்றாளர் தினத்தில் நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதுடன், இடர்களும் இன்னல்களும் எம்மீது திணிக்கப்படும் காலத்தில் நாம் ஒரு தேசிய இனமாக, இந்நிலைகளில் இருந்து மீண்டெழப் பணியாற்ற வேண்டும் என்பதில் எம்முடன் இணைந்து அர்ப்பணிப்புடன் தமிழ்ப் பணி செய்திடும் நிர்வாகிகளே, ஆசிரியர்களே!
 
உங்கள் இணைந்த பணியினால் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் எம் எதிர்காலச் சந்ததியினருக்குத் தமிழ்க்கல்வியுடன் கலை பண்பாட்டையும் வழங்கிடும் பணியை இவ் இடரான நேரத்திலும் ஒருங்கமைத்துச் செயற்பட, வழிசமைத்த தங்களின் அர்பணிப்பும் கரிசனையும் கலந்த செயற்பாடுகள் வார்த்தைகளால் சொல்ல இயலாதவை. இணையவழிக் கல்வி என்பது தங்களைப் போல் எமக்கும் புதிதானதே! புதிதாயினும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்னும் மனவுறுதியுடன், மிகவும் குறுகிய காலத்தில் காலத்தின் தேவை கருதி இதைப் பயின்று, இதன் பாவனைகளை அறிந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து இன்று இணையவழிக் கல்வியைச் சாத்தியமாக்கியுள்ளீர்கள். 
 
நாம் இன்று TEAMS எனும் பொருளைப் பாவித்துப் பயன் பெறுவதற்கு எமக்கான வழி முறைகளை ஆராய்ந்து திட்டமிட்டபடி நேர்த்தியாக எம்மை இவ் TEAMS பாவனைக்கு கொண்டு செல்வதற்கு களப்பணியாற்றியவர் திரு கோகுலன் ரட்ணசிங்கம் அவர்கள். இவர் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் மாணவனாகப் பயணித்து இன்று பொற்றோர் ஆகவும், அத்தோடு மென்பொருள்களைத் தயாரிக்கும், மென்பொருட்களுக்கு அனுசரனை வழங்கும் ஒரு தொழில் நிறுவனத்தை நிர்வகிக்கும் தொழில் அதிபராகப் பர்ணமித்திருப்பது(பணியாற்றுவது) எமக்கு பெருமை சேர்க்கும் விடயமாகும், அவரோடு அஸ்கர் பாரும் வளாகத்தில் இருந்து திரு கண்ணண் நாகேந்திரம் மற்றும் திரு ரிஷி குலேந்திரன் ஆகியோரின் பங்களிப்பும் அளப்பெரியது. இப்பெருமுயற்சிக்கான முன்னேற்பாடுகள் யாவும் அஸ்கர் பாஃரும்(Asker og Bærum), வளாகத்தில் நடந்தேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இன்று நாம் இணைய முற்றத்தில் (இணையவழிக் கல்வியில்) கால் எடுத்துவைத்துள்ளோம். எமக்கான எதிர்கால கல்வி வழிமுறைகளில் இணைய முற்றம்(இணையகல்வி) இணைந்து பயணிக்கும் என்பதை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம். ஆதலால் பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தி தமது பிள்ளைகளின் கல்வி தடையின்றிச் செயற்பட வழிசமைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். TEAMS இல் இணைந்து கொள்வதில் தங்களுக்குத் தடைகள், ஐயப்பாடுகள் இருப்பின் வளாகத்துடன் தொடர்பு கொண்டு இணையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
 
நோர்வே அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து வகுத்துள்ள திட்டங்களின்படி கொரோனா கிருமியின் பரவலால் முடக்கப்பட்டிருந்த நோர்வேப் பாடசாலைகள் எதிர்வரும் 27.04.2020 தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட விசேட நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் எமது கலைக்கூடங்களின் நேரடிக் கற்பித்தலை 15.08.2020 இற்கு முன்னர் மீண்டும் ஆரம்பிப்பதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கும் எனக் கருதுகின்றோம்.
 
இணைய முற்றத்தில் 14 வளாகங்கள் பொதுச் செயற்திட்டத்தில் இணைந்துள்ளன. அன்னை பூபதி வளாகங்களில் TEAMS பாவனையே எதிர்கால இணையவழிக்கல்வியாக அமையும். அன்னை வளாகங்கள் அனைத்தும் ஒர் அணியில் ஒன்றாகப் பயணித்து அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்வோம் என உறுதி கொள்வோம்.
 
கொரோன சார்ந்த கேள்விகள், சந்தேகங்கள், ஆலோசனைகளை மருத்துவ துறைசார் பணியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள நோர்வே தமிழர் சுகாதாரா அமைப்புடன் தொடர்பு கொள்ள 46678075 (NTHO)
 
நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுப்பதற்கு. தேவையற்ற ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை தவிற்த்து பிள்ளைகளின் உடல் நலத்தில் கருத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள்.
 
இவ்வண்
தலைமை நிர்வாகம்

 

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo