Home

You are here

புதிய கல்வியாண்டு 2020 - 2021

புதிய மாணவர் அனுமதியும் வகுப்புகள் ஆரம்பமும்: 22.08.2020

 வகுப்புகள் - 09.30 - 12.00

 தகவல்கள்

மீண்டும் ஒரு புதிய கல்வியாண்டில் பெற்றோர்கள், மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரையும் சந்திப்பதில் அன்னை பூபதி மொட்டன்ஸ்றூட் வளாகம் பெருமகிழ்வு அடைகின்றது. இருந்தும் இன்றைய கொரோனா நோய்த்தொற்று காரணமாக வழமை போல் நாம் பாடசாலையை நடாத்த முடியாத இக்கட்டான சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது, எனவே இக் காலகட்டத்தில் நாமும் எமது செயற்பாடுகளை அரசசட்ட விதிகளுக்கும், பாடசாலைச் சட்ட விதிகளுக்கும் அமைய  சுகாதாரப் பாதுகாப்பிற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம், எனவே அதற்கமைய சில மாற்றங்களும் முன்னேற்பாடுகளும் செய்துள்ளோம்.

 

எமது வளாகத்தில் 90ற்கு குறைவான மாணவர்கள் இருப்பதால் சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ள கொரோனா தடுடுப்பு முறைகளை இலகுவாக கையாளலாம். எனவே அனைவரையும் கொரோனா நோய்த்தொற்று பற்றிய பொது விதிகளை கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

 

எமது பாடசாலையின் தொற்றுக்கட்டுப்பாட்டுப் பொறுப்பாளருடன் இணைந்து, அவரின் வழிகாட்டலுடன் செயற்பட வேண்டும்.  

புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் மழலையர்,(3 வயது) ஆரம்ப வகுப்பு மாணவர்களின் பெற்றோரில் ஒருவர் மட்டும் தேவையேற்படின் மாணவர்களுடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர்;. 

இவர்கள் தொடர்ந்தும் இடைவெளியைக் கையாள்வது மிகவும் முக்கியமாகும்.

பாடசாலையில் உள்ளே நிற்பவர்கள் உங்களுடைய தொலைபேசி இலக்கம் மற்றும் பிற தொடர்புத் தகவல்களை

நிர்வாகத்திடம் பதிவிடுதல் வேண்டும். இத் தகவல்கள் தேவையேற்படின் சுகாதார ஆணையத்துக்கு தொற்றுநோயைக் கண்டறிய வழங்கப்படும்.

வகுப்புக்களுக்குரிய நுழைவாயில்கள் மூலமாக சிறிய மணித்துளி வித்தியாசத்தில்; மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்துவருவார்கள், அத்துடன் அனைத்து வகுப்புக்களும் சிறிய மணித்துளி வித்தியாசத்தில முடிவடையும்.

கை கழுவுதலுக்குரிய பூரண விளக்கமும், நோயழிப்பு மருந்தும் வைக்கப்படும்

மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றுக்கான  அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் பாடசாலைக்கு சமுகமளிக்க

அனுமதிக்கப் படமாட்டார்கள். 

மாணவர்களுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ

கொரோனா தொற்று ஏற்பட்டால் எமக்கு அறியத்தரப்பட வேண்டும்.

சிற்றுண்டிச்சாலை இயங்கமாட்டாது எனவே தேவையான சிற்றுண்டியும், குடிபானமும் மாணவர்கள் எடுத்து வருதல் வேண்டும்.

இடைவேளையின் போது மாணவர்கள் வகுப்பிற்குள்ளே இருத்தல் வேண்டும்.

கழிப்பறைக்குச் செல்பவர்கள் கைகளை நன்றாக கழுவவேண்டும்.

வகுப்புக்கள் முடிவடைந்ததும் மாணவர்கள், ஆசிரியர்களினால் பாவிக்கப்பட்ட உபகரணங்கள,; இருக்கைகள், நுழைவாயில் கைபிடிகள் அனைத்தும் மிகவும் நுணுக்கமாக சுத்திகரிக்கப்பட வேண்டும். 

 

குறிப்பு:

மேற்கூறிய தகவல்கள் யாவும் நீங்கள் அறிந்தவையே. இத் தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எமது கடமையாகும் எனவே பெற்றோர்கள், மாணவர்கள் இந்த காலத்தின் தேவைகருதிய மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

 

 

 

 

 

 

 

 

 

 
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo