இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு எமது கற்பித்தல் செயற்பாடுகள் இவ்வாரம் முதல், (07.11.2020) இணையமுற்றத்தில்(Teams) நடைபெறும். மாணவர்கள், ஆசிரியர்கள,; மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பபைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களாக நோர்வேயில் பரவிவரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையை மேலும் மோசமாகப்பாதிக்க ஆரம்பித்துள்ளது. நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுக்கும் நோக்குடனே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆதலால் தேவையற்ற ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை தவிர்த்து பிள்ளைகளின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துமாறு பெற்றோர்களை உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
அங்கத்தவர், பாதுகாவலர் தகவல்களைப் புதுப்பித்தலுக்கான படிவம்.
அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் நோர்வே இவ் விண்ணப்பபத்தை நிரப்பி அனுப்புவதன் மூலம் தங்களுக்கான இணையமுற்ற கடவுச்சொல் பயனாளர் பெயர் என்பன தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆகவே காலத்தை கருத்தில் கொண்டு தாமதிக்காது இவ் விணப்பத்தை நிரப்பி அனுப்பவும்.
அன்னையின் மாணவர்களுக்கான தனிப்பட்ட மின்னஞ்சல் ஒன்று அன்னையால் உருவாக்கப்படவுள்ளது. இது fornavn@elev.annai.no என்று அமையும். இந்த அடையாளமின்னஞ்சலே இனிவரும் காலங்களில் தங்கள் பிள்ளைகளின் அன்னையின் இணையவழிக்கல்வியின் (Teams) உள்ளே நுழைவதற்கானதாக அமையும். தங்கள் விண்ணப்பப்படிவம் கிடைக்கப் பெற்றதும் இவற்றைச் தயாரித்து தங்களுக்கு அனுப்பவுள்ளோம்
பதிவிற்க்கு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfZyuK87Yhy1JOIWdhjWtvT8iaKMi0au-naXCM5S4AYrbe8Mg/viewform
»