Home

You are here

தைத்திருநாள் வாழ்த்துரை 2021

https://youtu.be/3EZ6dIyfqtg

நோர்வேப் பிரதமர் மதிப்பிற்குரிய ஆர்னா சூல்பேர்க் அவர்கள்

வழங்கிய தைத்திருநாள் வாழ்த்துரை 2021

பேரன்புக்குரியவர்களே !

 இணையத்தோடு உறவாடும் இந்த வருடத்தில், கதிரவனுக்கும் உழவனுக்கும் நன்றி கூறும் பாரம்பரியத்தைக் கொண்ட உங்களைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

 நோர்வேயில் வாழும் தமிழர்கள் உட்பட இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் இந்த நாட்களில் தைப் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். இது தமிழர்களால் மிகப் பெரிய அடையாளமாகப் கருதப்படும் முக்கிய நாளாகும்.

இப்பாரம்பரியக் கொண்டாட்டம் என்பது தலைமுறைகளாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மேலும் இவ்வாறான விழாக்கள்  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆயினும் இந்த ஆண்டு வழக்கத்தை விட இது மிகவும் கடினமாகவுள்ளது, கொரோனா நோய்க்கிருமி காரணமாக இந்தப் பனிக்காலம் நாம் முன்பு பழகியதைவிட முற்றிலும் மாறுபட்டுவிட்டது, அத்துடன் நிலைமைகளும் மிகவும் பாரதூரமாவும் உள்ளது.

நோர்வேயில் தொற்று இப்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது, இதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். வைத்தியசாலைகள் இயங்குவதற்கும் அங்கு பணிபுரியும் மற்றும் நோய் தொற்றக்கூடிய ஆபத்து நிலைமையில் இருக்கும் மருத்துவ சேவையாளர்களை பாதுகாப்பதற்கும் நாம் இந்த கட்டுப்பாடுகளைச் செய்ய வேண்டும். இதன்மூலம் மருத்துவ உதவி தேவைப்படும் அனைவருக்கும் வைத்தியசாலை பணியாளர்கள் உதவி செய்ய முடியும் என்பதையும் நாம் உறுதிப்படுத்த முடியும்.

இந்த நோய்த் தொற்றுக் காலத்தில் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தினர் தமது செயல் வடிவத்தை Teams இணையமுற்றம் மூலம் செயற்திறன் மிக்கதாக உருமாற்றியதை நான் அறிவேன். தற்போது இணைய வழியிலேயே சிறார்களுடனும் இளைஞர்களுடனும் தகவல்கள் மற்றும் தொடர்புகள் பேணப்படுகின்றது.

மிகக் குறுகிய கால இடைவெளியில் இவ் இடர்காலத்தில், உணர்வுமிக்க தன்னார்வத் தொண்டர்களின் சேவையால் அன்னை பூபதியின் ஏனைய வளாகங்களையும் இணைத்து வந்துள்ளீர்கள். இதில் ஏறத்தாள 1800 வரையிலான உறுப்பினர்களை இணையமுற்றத்தில் Teams மூலம் இணைத்துள்ளீர்கள். இது மிகவும் வியப்பிற்குரிய மாற்றமாகும்.

இக்கால கட்டத்தில் நீங்கள் அனைவரும் Teams மூலம் இணைந்து கொள்வதென்பது, சிறப்புமிக்க நல்ல மாற்றமாகும். இது மழலைகள் மற்றும் இளையோர்களுக்கு மதிப்புமிக்க சமூகத் தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இத்தளம் பெரியவர்கள் மற்றும் ஏனையோருடன் தொடர்பு கொள்வதற்கு உபயோகப்படுகிறது. அத்துடன், உங்கள் அனைவரின் உளவள ஆரோக்கியத்திற்கும் சாதகமான பங்களிப்பை செய்யவும் இத்தளம் உதவுகிறது.

மேலும் இந்நாளில் நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், தன்னார்வலப் பணியாளர் அனைவரினதும் சிறப்புப் பணிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறேன்.

 நிறைவாக இத் தைப்பொங்கல் திருநாளை, இனிதே கொண்டாடி மகிழ உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்!

annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo