அன்னைத் தமிழ் முற்றத்தில் தைத்திருநாள் சிறப்பு நிகழ்வுகள்!
அன்னை தமிழ்முற்ற நிகழ்வுகள் 9ம் 10ம் திகதி சனி ஞாயிறு தினங்களில் இடம்பெறும். நடைபெறும் நிகழ்வுகளை இணையத்தில் பார்வையிட கீழ்காணும் இணைப்பை அழுத்தவும்.
நிகழ்வு நடைபெறும் நேரம்
சனிக்கிழமை பிற்பகல் 14.:30 - நிகழ்வு 1
சனிக்கிழமை பிற்பகல் 15:30 - நிகழ்வு 2
ஞாயிறு முற்பகல் 11:00 - நிகழ்வு 3
ஞாயிறு முற்பகல் 12.:00 - நிகழ்வு 4
ஞாயிறு முற்பகல் 13:00 - நிகழ்வு5
நிகழ்வுகள் அனைத்தும் இணைய முற்றத்தில் இடம்பெறும்.
மேற்படி 5 நிகழ்வுகளிலும் வெவ்வேறு தலைப்புகளில் ஆண்டு 6 முதல் ஆண்டு 10 வரை உள்ள 150 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிச் சிறப்பிப்பர்.
நிகழ்வுகளின் தலைப்புக்கள் வருமாறு:
ஆண்டு 6 - பொங்கல் திருநாள் உணர்த்தும் தமிழர் பண்பாடுகள்: விருந்தோம்பல், நன்றி கூறுதல்
ஆண்டு 6 - பொங்கல் நாள் உணவுகள்- பலகாரங்கள், முக்கனிகள், படைத்தல், வணங்குதல்
ஆண்டு 6 - மாட்டுப்பொங்கல் எப்பொழுது, ஏன், யாரால், யாருக்கு, எங்கே, எவ்வாறு செய்யப்படுகின்றது?
ஆண்டு 7- தமிழர் பாரம்பரிய உடைகள்,தமிழர் உணவுகள்,தைத்திருநாள் தொடர்பான பாடல்கள்
ஆண்டு 8 - கவிதை மொழிதல்: தலைப்புகள் தைத்திருநாள், தமிழர் பண்பாடு, தமிழ்மொழி
ஆண்டு 9 மற்றும் 10 - பட்டிமன்றம் அல்லது கருத்துக்களம் - தலைப்பு: இணையமுற்றத்தில் தமிழ்மொழி கற்றல் மாணவர்களைத் தூண்டுவதாகவுள்ளதா அல்லது தூங்கவைக்கிறதா?
ஆண்டு 9 மற்றும் 10 கருத்துக்களம்: தமிழ்மொழியைப் பேசுவதில் மாணவர்களாகிய நாம் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன