16.01.21 சனிக்கிழமை மற்றும் 17.01.21 ஞாயிறு ஆகிய இரு தினங்களும் அன்னைத் தமிழ் முற்றத்தில் தைத்திருநாள் சிறப்பு நிகழ்வுகள் இடம் பெறும்.
நிகழ்வு நடைபெறும் நேரம்
கொரோனாவின் பரவல் ஒஸ்லோ மாநகரில் அதிகரித்துவருவதாலும் ,நோர்வே சுகாதார சட்டவிதிகளையும் கருத்தில்கொண்டு எதிர்வரும் 18.01.21வரை றொம்மன் வளாகத்தின் தமிழ்,கலை வகுப்புக்கள் அனைத்தும் தொடர்ந்தும் இணையவழியிலேயே நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தை 9 ம் திகதியும் அதன் பின்னரும் இடம் பெறும் நிகழ்வு:· பிறக்கவுள்ள புத்தாண்டின் முதல் நிகழ்வாக மழலையர் மற்றும் பாலர் பாடல் இடம்பெறும்· பாடல்கள் தமிழர் பண்பாடு, தமிழ்மொழி சார்ந்த பாடல்களாக இருப்பது விரும்பத்தக்கது.
மழலையர் , பாலர் , ஆண்டு 1 , 2 வகுப்புக்களுக்கு 09.01.2021 தேதியிலும் , 3, 4 வகுப்புக்களை 10.1.2021 தேதியிலும் நிகழ்வுகள் நடைபெறும்.
2014ல் பிறந்த (1ம் ஆண்டு) மாணவர்களுக்கு ஆத்திசூடி வழங்கப்பட்டுள்ளது.
2013ல் பிறந்த (2ம் ஆண்டு) மாணவர்களுக்கு கொன்றைவேந்தன் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ் வகுப்புக்கள் வளாகத்தில் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ் வகுப்புக்களை இணையமுற்றத்தில் (TEAMS ) இவ்வாரம் முதல் (06.11.2020 வெள்ளி, சனி, ஞாயிறு ) நடாத்துவது என திட்டமிட்டுள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம் முடிவு எடுக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாக நோர்வேயில் பரவி வரும் கொரோனா கிருமியின் தாக்கம், எங்களின் நாளாந்த வாழ்கையை மேலும் மோசமாகப் பாதிக்க ஆரம்பித்துள்ளது. நோய்க்கிருமி தொற்றும் அபாயத்தை தடுக்கும் நோக்குடனே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறாவிட்டாலும் மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளுக்கான அங்கத்தவர் கட்டணத்தை செலுத்தி அங்கத்துவத்தை உறுதி படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
அங்கத்துவ கட்டணத்தை செலுத்தி உறுப்பினராக வேண்டிய இணைய தள முகவரி
இந்த தளத்தில் "tamil" என தேடி "Tamilsk barn og ungdom idrettsklubb (Oslo)" என்ற பெயருடைய கழகத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். 15 வயதுடைய பிள்ளைகளுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். உறுப்பினராக சேர வேண்டிய கடைசித்தேதி : 31.10.2020
07.10.2020 அன்று 18.30 மணிக்கு ஆரம்பமாகிறது.இதற்கு கட்டணமாக 200 குறோணர்களை 07.10.2020 க்கு முன்னதாக வங்கிக் கணக்கில் செலுத்தி தங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளவும். வங்கி இலக்கம் : 5010 05 07770