வளர்பிறை வகுப்புக்கள் வெள்ளிக்கிழமை 17.30மணிக்கும்,சனிக்கிழமை 9.00மணிக்கும்,ஞாயிற்றுக்கிழமை 15.30மணிக்கும் நடைபெறுகின்றது. வாசிப்பதற்கு,எழுதுவதற்கு சிரமப்படுகின்ற பிள்ளைகள் இவ்வகுப்புக்களில் தம்மை இணைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மழலையர் முற்றத்தில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் சென்று தங்கள் தகவல்களை தந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
றொம்மன் வளாகச்செயற்பாடுகள் அனைத்தும் påske12.04.20வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குரோனாவைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நோர்வே சட்டதிட்டங்களுக்கமையவும் , உடல்நலத்தை கருத்தில் கொண்டும் இம்முடிவு நேற்றையதினம் நடைபெற்ற அனைத்து வளாகங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில் நோர்வேஜியப் பாடசாலையில் தற்போது நடைமுறையிலுள்ள கற்பித்தல் முறையை ஒத்த Teams மென்பொருளைப் பயன்படுத்தி நாமும் தமிழையும்,கலையையும் மாணவர்களுக்கு ஊட்டும் வழிவகைகளை மிகவிரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம்.
ஆசிரியர்கள்,நிர்வாகத்தினர் தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்துவதற்காக வற்சப் குழு ( WhatsApp )ஒன்றை ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை இணைத்து உருவாக்கவுள்ளோம். எனவே வகுப்பு ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஆசிரியர்கள் தமிழ்க்கல்வி பற்றிய விடயங்களையும்,
நிர்வாகத்தினரால் பெற்றோர்களுக்கு வழங்கப்படவேண்டிய தகவல்களும் மட்டுமே இதில் பதிவிடப்படும்.
01.06.19 வரை வளாகத்தால் வழங்கப்பட்ட தவணைக்கட்டணங்களை (2017,2018,2019) இதுவரை செலுத்தாதவர்களுடைய பெயர்கள் Inkasso இற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்பதை மிகவும் மனவேதனையோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.
பலமுறை பலவழிகளில் நாம் முயற்சியெடுத்தும் ஒரு சிலரே கட்டணங்களை செலுத்தி உள்ளனர் என்பதையும் அறியத்தருகின்றோம்.