Home

விண்ணப்பப்படிவம்

You are here

நோர்வேஜியப் பாடசாலையில் தற்போது நடைமுறையிலுள்ள கற்பித்தல் முறையை ஒத்த Teams மென்பொருளைப் பயன்படுத்தி நாமும் தமிழையும்,கலையையும் மாணவர்களுக்கு ஊட்டும் வழிவகைகளை மிகவிரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்

றொம்மன் வளாகச்செயற்பாடுகள் அனைத்தும் påske12.04.20வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
குரோனாவைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால்  நோர்வே சட்டதிட்டங்களுக்கமையவும் , உடல்நலத்தை கருத்தில் கொண்டும் இம்முடிவு நேற்றையதினம் நடைபெற்ற அனைத்து வளாகங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   அதேநேரத்தில்  நோர்வேஜியப் பாடசாலையில் தற்போது நடைமுறையிலுள்ள கற்பித்தல் முறையை ஒத்த Teams மென்பொருளைப் பயன்படுத்தி  நாமும்  தமிழையும்,கலையையும் மாணவர்களுக்கு ஊட்டும் வழிவகைகளை மிகவிரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம்.
அதுவரை வற்சப்மூலம் வகுப்பாசிரியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மாணவர்களின் கற்கைநெறியை   தங்குதடையின்றி கொண்டுசெல்லுமாறு பெற்றோர்களை இத்தருணத்தில் வேண்டிநிற்கின்றோம்.    
 
உடல்நலத்தில் அதிகூடிய கவனம்செலுத்தி  உறுதியோடு வாழ்வோம்.
annai.no
Annai poopathi tamilsk kultursenter, Sentralstyre Postboks 145 Furuset,1001 Oslo